Don't Miss!
- News
ஆஆ.. இது வேற நடக்குதா.. ஒரே வார்த்தையில் அதிர செய்த "சொமேட்டோ" ஊழியர்.. அந்த CEO-வே ஆடிப்போயிட்டாராமே
- Education
NAAN MUDHALVAN SHORT FILM FESTIVAL 2023:குறும்பட திருவிழா போட்டியில் முதல் பரிசு ரூ.50 ஆயிரம்...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
ஆணழகன் அஜித்.. ஷாலினி மடியில் எப்படி உட்கார்ந்து இருக்காரு பாருங்க.. டிரெண்டாகும் த்ரோபேக் பிக்!
சென்னை: நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி மடியில் அமர்ந்திருக்கும் த்ரோபேக் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.
அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட உடனடியாக திருமணமும் செய்து கொண்டனர்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இருவருக்கும் இடையே காதல் இன்னமும் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு ஆதாரமாக சமீபத்தில் இருவரும் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோக்களும் துணிவு படத்தின் ரிலீஸை முன்னிட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
Thunivu
Box
office
day
3:
வாரிசுடன்
துணிவாக
மோதிய
அஜித்...
பொங்கல்
ரேஸில்
ரியல்
சம்பவம்

அஜித் - ஷாலினி காதல்
1999ல் இயக்குநர் சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி, ரகுவரன் நடிப்பில் வெளியான அமர்க்களம் படத்தில் இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். அதற்கு பிறகும் இருவரும் நடிக்க வேண்டாம் ரியல் லைஃப் ஜோடிகளாக மாறிடலாம் என முடிவு செய்து காதலித்து கல்யாணமும் செய்து கொண்டனர். அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு அழகான குழந்தைகளுடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

துணிவு படம் பார்த்த ஷாலினி
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்னதாகவே சென்னையில் உள்ள ஃபோர் ஃபிரேம்ஸ் தியேட்டரில் ப்ரீமியர் ஷோவை பார்த்து ஹாப்பி ஆனார். துணிவு படத்தின் ரிசல்ட் வெளியாகி உள்ள நிலையில், இருவரும் செம சந்தோஷத்தில் உள்ளார்களாம்.

ஷாலினி மடியில் அஜித்
துணிவு திரைப்படம் ரியல் வின்னர் என போனி கபூர் அறிவித்துள்ள நிலையில், தற்போது ஷாலினி மடியில் அஜித் அமர்ந்துள்ள த்ரோபேக் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். அஜித் செம க்யூட்டாக தனது மனைவியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தீராத ரொமான்ஸ்
சமீபத்தில் துணிவு படம் வெளியாவதற்கு முன்னதாக கூட ஷாலினி உடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நடிகர் அஜித் அங்கே எடுத்துக் கொண்ட க்யூட் ரொமாண்டிக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

அடுத்து காதல் படமா
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்க உள்ள நிலையில், அந்த படம் டான் படமாக இருக்குமா? அல்லது விக்னேஷ் சிவன் ஸ்டைலில் ரொமாண்டிக் படமாக இருக்குமா? என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. நடிகர் அஜித் வலிமை, துணிவு படங்களில் துப்பாக்கி உடன் நடித்து விட்ட நிலையில், மீண்டும் விஸ்வாசம் போல ஒரு ஃபீல் குட் மூவி வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.