»   »  வீரம், வேதாளத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் அஜீத் - சிவா!

வீரம், வேதாளத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையும் அஜீத் - சிவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் இணைகிறது அஜீத் - சிவா கூட்டணி.

முழங்கால் ஆபரேஷனுக்குப் பிறகு ஓய்விலிருந்த அஜீத், இப்போது மீண்டும் நடமாடத் தொடங்கிவிட்டார். புதிய படத்துக்கான வேலைகளையும் ஆரம்பித்துள்ளார்.

வேதாளம் படத்துக்குப் பிறகு அஜீத் நடிக்கும் புதிய படத்தை ஏ ஆர் முருகதாஸ், விஷ்ணுவர்தன், சிவா, கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று கூறப்பட்டது.

மீண்டும் சிவா

மீண்டும் சிவா

ஆனால் வாய்ப்பு மீண்டும் சிவாவுக்கே கிடைத்துள்ளது. வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைகின்றனர்.

சத்யஜோதி பிலிம்ஸ்

சத்யஜோதி பிலிம்ஸ்

இந்தப் படத்தை ‘சத்யஜோதி பிலிம்ஸ்' டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார். அஜீத்தை வைத்து அவர் தயாரிக்கும் முதல் படம் இது.

ஜூனில் படப்பிடிப்பு

ஜூனில் படப்பிடிப்பு

படத்தின் திரைக்கதை வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் தொடங்குகிறது.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

புதிய படத்தில் நடிப்பதற்கு அஜித் வேகமாக தயாராகி வருகிறார். இதற்காக, அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

Read more about: ajith, siva, அஜீத், சிவா
English summary
Ajith's new movie script work is going full swing and the shoot will begin in coming June.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil