»   »  அஜித் - சிவா புதிய படம்... 5 க்விக் அப்டேட்கள்!

அஜித் - சிவா புதிய படம்... 5 க்விக் அப்டேட்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித் - சிவா புதிய படம்... 5 க்விக் அப்டேட்கள்!- வீடியோ

வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் இணைந்து இயக்குநர் சிவாவும் நடிகர் அஜித்தும் நான்காவது முறையாக இணையும் படம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.

இப்போதைக்கு தல 58 என்று அழைக்கப்படும் இந்தப் படம் தொடங்குவது வரும் பிப்ரவரி 2018-ல்.

அஜித் நிபந்தனை

அஜித் நிபந்தனை

இயக்குநர் சிவாவுக்கு அஜித் விதித்துள்ள நிபந்தனை ஒன்றேதான். 'படத்தை சீக்கிரம் முடிச்சிடணும். 2018 ஜூலை அல்லது ஆகஸ்டில் வெளியிடணும்'.

விவேகம்தான்

விவேகம்தான்

ஷூட்டிங்கை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிவா கைதேர்ந்தவர். வீரம், வேதாளம் இரண்டு படங்களையுமே அப்படித்தான் அவர் எடுத்தார். விவேகம்தான் கொஞ்சம் இழுத்தது. ஆனால் அதற்கு காரணம் இருந்தது.

புதிய படம்

புதிய படம்

ஆகஸ்ட் 15-ம் தேதி அல்லது விஜயதசமி நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பது அஜித்தின் விருப்பம். அதே நேரத்தில் இன்னொரு புதிய படத்தை அறிவிக்கவும் திட்டம் உள்ளதாம்.

மீண்டும் யுவன்

மீண்டும் யுவன்

இந்த முறை யுவன் சங்கர் ராஜாவுடன் கைகோர்ப்பார்கள் அஜித்தும் சிவாவும் என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. யுவன் கடைசியாக அஜித்துக்கு இசையமைத்த படம் ஆரம்பம்.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

ஸ்க்ரிப்ட் வேலைகள் விறுவிறுவென முடிந்துவிட்டன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிடலாம். விவேகம் படத்தைத் தயாரித்ததும் சத்யஜோதிதான். ஆனால் நஷ்டம். அஜித் கைவிடவில்லை. "கவலை வேண்டாம்.. அடுத்த படத்தை அடக்கமான பட்ஜெட்ல சீக்கிரம் முடிப்போம்," என தயாரிப்பாளருக்கு கைக் கொடுத்துள்ளார்.

English summary
5 quick updates on Ajith - Siva's new project Thala 58

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil