Just In
- 41 min ago
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
- 48 min ago
அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!
- 55 min ago
நீச்சல் குளத்தில் மொத்த முதுகையும் காட்டி.. மிரள விடும் பிக் பாஸ் ஷெரின்.. குவியுது லைக்ஸ்!
- 1 hr ago
நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி
Don't Miss!
- Sports
8 அணிகள்.. மொத்தமாக சென்னைக்கு வரும் ஐபிஎல் தலைகள்.. பெரிய அளவில் நடக்க போகும் மினி ஏலம்!
- News
டென்ஷனில் எடப்பாடியார்.. :"அந்த" பக்கம் "இந்த" பக்கம் சாஞ்சுராதீங்க.. பொறுமையா இருங்க.. ஒரே அட்வைஸ்!
- Lifestyle
பார்வையையே இழக்கச் செய்யும் கண் அழுத்த நோயின் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
- Automobiles
கோவிட்-19 தடுப்பூசிகளை பத்திரமாக விநியோகிக்க புதிய டிரக் அறிமுகம்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தல 60 அப்டேட் : மீண்டும் அஜித்தை இயக்கும் சிவா.. இதுவும் ரீமேக் தான்.. என்ன படம் தெரியுமா?
சென்னை: தல 59 படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து அஜித்தை நான்கு படங்கள் இயக்கியவர் என்ற பெருமைக்குரியவர் இயக்குநர் சிவா. இவர்களது கூட்டணியில் கடைசியாக வெளிவந்த விஸ்வாசம் படம் இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விரைவில் இப்படத்தின் 50வது நாள் வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, விஸ்வாசம் படத்தை முடித்ததும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தை வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

வக்கீலாக அஜித்:
இந்தப் படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜித். தற்போது அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக நடிக்கிறார். அஜித் பிறந்தநாளான மே முதல் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

சிறிய மாற்றம்:
இப்படத்திற்குப் பிறகு தல 60 படத்தையும் போனி கபூரே தயாரிக்க இருக்கிறார். அதனையும் வினோத்தே இயக்கிறார் என்பது ஏற்கனவே நாம் அறிந்த தகவல் தான். ஆனால் தற்போது இந்த செய்தியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மீண்டும் சிவா:
அதாவது தல 60 படத்தை வினோத் இயக்கவில்லை. அவரது படத்திற்கு முன்பு சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித். இது எகிப்து படமான 'ஹெப்டா - தி லாஸ்ட் லெக்சர்'-ன் ரீமேக் எனச் சொல்லப் படுகிறது.

போனிகபூர் தயாரிப்பு:
இந்தப் படத்தை முடித்த பிறகு தல 61 படத்தை வினோத் இயக்குவாராம். தல 59 படத்தை முடித்த பிறகு அதற்கான கதையை மெருகேற்றும் வேலையில் அவர் ஈடுபட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் புதிய தகவல் மூலம் அஜித் அடுத்தடுத்து மூன்று படங்கள் போனிகபூர் தயாரிப்பில் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.

நிச்சயம் வி தான்:
‘வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்' படங்களுக்கு பிறகு 5-வது முறையாக அஜித் - சிவா கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எது எப்படியோ இந்தப் படத்தின் தலைப்பும் நிச்சயம் வி'யில் ஆரம்பிப்பதாகத் தான் இருக்கும் என்பதே அவர்களது கருத்து.