»   »  என்னாது மறுபடியுமா?: தல, இது உண்மையா?

என்னாது மறுபடியுமா?: தல, இது உண்மையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் புதுப்படம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜீத், இயக்குனர் சிவா முதன் முதலாக வீரம் படத்தில் ஒன்று சேர்ந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு வேதாளம் படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.

Ajith, Siva to work together again?

அந்த கூட்டணி விவேகம் படத்திலும் ஒன்று சேர்ந்தது. விவேகம் வரும் 24ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 120 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் அஜீத், சிவா நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றப் போவதாக கூறப்படுகிறது. அந்த படம் உடனே எடுக்கப்படுகிறதா இல்லை பின்னர் எடுக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

அஜீத், சிவா நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ள படம் வரலாற்று படமாம். அதுவும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப் போகிறார்களாம்.

English summary
Buzz is that Ajith and director Siva are going to work together for fourth time in a historical movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil