»   »  குட்டி தல 'ஆத்விக்' உருவத்தை பச்சை குத்திக் கொண்ட அஜீத் ரசிகர்கள்

குட்டி தல 'ஆத்விக்' உருவத்தை பச்சை குத்திக் கொண்ட அஜீத் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜீத்குமாரின் மகன் ஆத்விக் உருவத்தை தங்களது உடம்புகளில் அவரது ரசிகர்கள் பச்சை குத்திக் கொண்டிருக்கின்றனர்.

அஜீத் -ஷாலினி தம்பதியினருக்கு அனௌஷ்கா, ஆத்விக் என்று 2 குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகன் ஆத்விக் புகைப்படத்தை இதுவரை அஜீத் தம்பதியினர் வெளியிடாமலே வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தனது குடும்பத்தினருடன் அஜீத் பாஸ்போர்ட் அலுவலகம் வந்தார். இந்த செய்தி தெரிந்த அஜீத் ரசிகர்கள் அங்கு ஒட்டுமொத்தமாக கூட அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிறந்து 10 மாதங்கள் கடந்த நிலையில் பாஸ்போர்ட் அலுவலகம் வந்த ஆத்விக்கை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்ப அது வைரலாக பரவி வருகிறது.

மேலும் 'குட்டிதல' என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி அதனை இந்தியளவில் அஜீத் ரசிகர்கள் ட்ரெண்டடிக்க வைத்தனர்.தற்போது அஜீத் ரசிகர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று ஆத்விக்கின் உருவத்தை தங்களது கைகளில் பச்சை குத்திக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை எந்த ஒரு நடிகரின் மகனையும் ரசிகர்கள் பச்சை குத்திக் கொண்டதில்லை என்பதால்,அஜீத் ரசிகர்களின் இந்த செயல் தமிழ் சினிமாவுலகில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜீத் பாஸ்போர்ட் அலுவலகம் வந்து சென்ற பின்னரே ஆத்விக்கின் புகைப்படம் வெளிவரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Ajith Kumar,son Adhvik Tattoos are his fans in the Shape of their Bodies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil