»   »  மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்த அஜீத்... டுவிட்டரில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்

மகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்த அஜீத்... டுவிட்டரில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: லண்டன் செல்ல இருக்கும் அஜீத் தன் மகனுக்கு பாஸ்போர்ட் எடுப்பதற்காக நேற்று பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு குடும்பத்தினருடன் வந்தபோது அவரைக் காண ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முதன்முதலாக அஜீத் மகனை பார்த்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் பதிவு செய்தனர். ரசிகர்களின் குட்டி தல ஹேஸ்டேக் டிரெண்ட் ஆனது.

நடிகர் அஜீத், ஷாலினி தம்பதியருக்கு அனோஷ்கா என்ற 7 வயது மகள் இருக்கிறாள். கடந்த மார்ச் 2ம் தேதி இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது. மகனின் போட்டோவை இதுவரை ஊடகங்களில் வெளியிடாமல் இருந்தார். இந்த நிலையில் மகனின் பாஸ்போர்ட் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேற்று வந்த அஜித்தைக் காண பெரும் ரசிகர்கள் கூட்டம் கூடியது.

'வேதாளம்' இறுதிகட்ட படப்பிடிப்பில், அஜீத்துக்கு ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டது. இதனால், உடனடியாக் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு வீட்டிலேயே ஒய்வு எடுத்து வந்தார் அஜீத். இப்போது தனது குடும்பத்தினருடன் லண்டனில் 2 மாதங்கள் ஒய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குடும்பத்தினருடன் அஜீத்

தனது மகன் ஆத்விக் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வந்திருந்தார் அஜீத். குடும்பத்தினருடன் அஜீத் வந்திருந்ததால் அவரைக் காண பெரும் கூட்டம் பாஸ்போர்ட் அலுவலகம் முன்பாக கூடியது.

இணையத்தில் கொண்டாடிய ரசிகர்கள்

பாஸ்போர்ட் அலுவலகம் அருகில் அஜித் மற்றும் ஷாலினி, அனோஷ்கா, ஆத்விக் ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்தன. ஆத்விக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்திருந்தனர்.

குட்டி தல

குட்டி தல

அஜித் தன் மகன் ஆத்விக்கை முதன் முறையாக பொது இடத்துக்கு அழைத்து வந்ததால், இணையத்தில் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். #KuttyThala என்ற ஹேஷ்டேக் சென்னை, பெங்களூர் மற்றும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில்

லண்டனில் இரண்டு மாதம் ஓய்வெடுத்த பின்னர் சென்னை திரும்பும் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். வீரம், வேதாளம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
There were a lot of speculations about the name of "Kutti Thala", the son of actors Ajith and Shalini. The star couple son Aadvik first come out passport office. Ajith fans trending on Aadvik's first photo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil