»   »  நியூ இயர் ட்ரீட்... என்னை அறிந்தால் பாடல்களுடன், டிரைலரும் ரிலீஸ்!

நியூ இயர் ட்ரீட்... என்னை அறிந்தால் பாடல்களுடன், டிரைலரும் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புத்தாண்டு தினத்தன்று கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் படத்தின் பாடல்களுடன், டிரைலரும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

கௌதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள புதிய படம் ‘என்னை அறிந்தால்'. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ரசிகர்களை அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆடியோ ரிலீஸ்...

ஆடியோ ரிலீஸ்...

என்னை அறிந்தால் பாடல்கள் புத்தாண்டு தினத்தன்று இரவு ரிலீஸ் செய்யப்படுவதாக கடந்தவாரம் அறிவிக்கப்பட்டது. எனவே, புத்தாண்டை தல பட பாடல்களுடன் துவக்குவதற்கு ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

டிரைலரும்...

டிரைலரும்...

இந்நிலையில், என்னை அறிந்தால் படத்தின் பாடல்களோடி, அப்படத்தின் டிரைலரையும் வெளியிட முடிவு செய்யப் பட்டுள்ளது.

வரலாறு...

வரலாறு...

இது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம் கூறுகையில், ‘சமீபத்தில் வெளியான 'என்னை அறிந்தால் ' திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் உலகெங்கும் பரவியதோடு, குறைந்த காலக்கட்டத்தில் அதிகம் பேர் பார்த்த வரலாற்றையும் உண்டாக்கியது.

பேரானந்தம்...

பேரானந்தம்...

வருகின்ற ஜனவரி 1-ஆம் தேதி 'என்னை அறிந்தால்' படத்தின் இசையுடன் படத்தின் முன்னோட்டமும் வெளிவருவது ரசிகர்களுக்கு பேரானந்தம் தரும். புது வருடத்தன்று ரசிகர்களுக்கு இந்த இரட்டிப்பு பரிசு மகிழ்ச்சி தரும் என்பதில் எங்களுக்கு பெருமை.

இறுதி கட்ட பணிகள்...

இறுதி கட்ட பணிகள்...

படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டிக்கொண்டு இருக்கிறது. ஜனவரி 1-ஆம் தேதி வியாழக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

இனிப்பு பொங்கல்...

இனிப்பு பொங்கல்...

இதைத் தொடர்ந்து இந்த பொங்கலும் 'என்னை அறிந்தால்' வெளியாவதை தொடர்ந்து ரசிகர்களுக்கு மட்டுமின்றி, எல்லா தரப்பு மக்களுக்கும் இனிப்பு பொங்கலாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The much-awaited Ajith's "Yennai Arindhaal" trailer has been postponed to 1 January. The video-clip will release along with the audio for the New Year.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil