பைக்கையும் அஜித்தையும் பிரிக்கவே முடியாது.. ஐரோப்பாவுக்கு டூர் அடிக்க கிளம்பிய அஜித்!

சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் ஏகே 61 படப்பிடிப்பை எந்தவொரு பிரேக்கும் இல்லாமல் நடத்தி வந்த நடிகர் அஜித் தற்போது சின்ன பிரேக் விட்டுவிட்டு ஐரோப்பாவிற்கு பைக் டூர் அடிக்க கிளம்பி விட்டார்.

வலிமை படத்தின் படப்பிடிப்பின் போதும் வெளிநாடுகளில் பைக் டூர் செய்தார் நடிகர் அஜித். வலிமை படம் முழுவதுமே பைக் தான் முக்கிய கான்செப்ட்டாக இருந்தது.

இந்நிலையில், ஏகே61 படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு வெளிநாடுக்கு சென்றிருப்பது ஏன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஐரோப்பாவில் அஜித்

ஐரோப்பாவில் அஜித்

யுகே மற்றும் ஐரோப்பாவில் மிகப்பெரிய அளவிலான பைக் டூர் செல்ல நடிகர் அஜித் கிளம்பி விட்டார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிட சொல்லி உத்தரவிட்ட நிலையில், இணையத்தில் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. காஸ்ட்லி பைக்குடன் நடிகர் அஜித் செம மாஸாக போஸ் கொடுத்து நிற்கும் பல புகைப்படங்கள் வெளியாகி உள்ள்னா.

பைக்னா உயிர்

பைக்னா உயிர்

நடிகர் அஜித்தையும் பைக்கையும் பிரிக்கவே முடியாது என்றே சொல்லலாம். மங்காத்தா, ஆரம்பம், வலிமை என பல படங்களில் தாறுமாறாக அஜித் பைக் ஓட்டும் காட்சிகளும் பட்டையைக் கிளப்பும். சினிமாவில் மட்டுமின்றி ரியல் லைஃப்பிலும் அடிக்கடி பைக் டூர் சென்று விடுகிறார் நடிகர் அஜித். வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட இடங்களுக்கு அஜித் பைக் டூர் சென்றிருந்தார். சென்னை டு டெல்லிக்கும் பைக்கிலேயே டிராவல் சென்றிருந்த அஜித்தின் புகைப்படங்களும் முன்னதாக வெளியாகின.

உலகத்தை சுற்ற

உலகத்தை சுற்ற

பைக்கிலேயே உலகம் முழுவதும் சுற்றி வரும் ஆசையும் நடிகர் அஜித்துக்கு இருக்கு. பல வெளிநாடுகளுக்கு பைக்கை எடுத்துக் கொண்டு தனது டீமுடன் கிளம்பி விடுகிறார் நடிகர் அஜித். வலிமை படத்தில் ஏகப்பட்ட பைக் ஸ்டன்ட் காட்சிகள் இருந்தன. அப்படியொரு காட்சியில் நடிக்கும் போது, வீலிங் செய்து பறந்த போது கீழே விழுந்து அவருக்கு அடிபட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனாலும், அந்த பைக் மீதுள்ள மோகம் அவருக்கு என்றுமே மாறியதில்லை.

ஏகே61 என்னாச்சு

ஏகே61 என்னாச்சு


ஆதி- நிக்கி கல்ராணி திருமணம், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி என எதிலும் கலந்து கொள்ளாமல் விறுவிறுப்பாக ஒரே மூச்சாக ஏகே61 படத்தின் படப்பிடிப்பை அஜித் டபுள் கால்ஷீட் போட்டு நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது திடீரென வெளிநாட்டுக்கு பைக் டூருக்காக கிளம்பி இருக்கிறாரே? ஏகே61 படப்பிடிப்பு என்ன ஆச்சு என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

புனேவில் படப்பிடிப்பு

புனேவில் படப்பிடிப்பு

ஹைதராபாத் போர்ஷன் எல்லாம் முடிந்து அடுத்த வாரம் புனேவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ள நிலையில், கிடைத்த கொஞ்ச கேப்பில் தான் இப்படி ஐரோப்பாவில் பைக் ட்ரிப்புக்காக கிளம்பி விட்டார். மனுஷன் ரெஸ்ட் எடுக்கவே மாட்டாரா? என ரசிகர்கள் அஜித்தின் எனர்ஜியை பார்த்து ஆச்சர்யத்தில் மெய் மறந்து போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X