»   »  தல 58: மீண்டும் இணையும் 'மிரட்டல்' கூட்டணி?

தல 58: மீண்டும் இணையும் 'மிரட்டல்' கூட்டணி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ்-அஜீத் கூட்டணி மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜீத்தின் 'தீனா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ்.

2 வது முறையாக இருவரும் இணையவிருந்த 'மிரட்டல்' ஒருசில காரணங்களால் கைவிடப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இருவரும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீனா

தீனா

அஜீத்-சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான இப்படம் அஜீத் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அஜீத்திற்கு முதன்முதலில் தல என்ற அடையாளத்தைக் கொடுத்தவர் என்ற பெருமையும் முருகதாஸுக்கு உண்டு.

மிரட்டல்

மிரட்டல்

தீனாவைத் தொடர்ந்து மிரட்டல் என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. 2 வது முறையாக மீண்டும் அஜீத்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைவார்கள் என்று, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தி

இந்தி

விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' என 2 பிளாக்பஸ்டர்களைக் கொடுத்த முருகதாஸ், தற்போது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக இருக்கிறார். இந்தி நடிகையான சோனாக்ஷி சின்ஹாவை மையமாக வைத்து இவர் இயக்கிய 'அகிரா' முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்ததாக மகேஷ்பாபுவை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை முருகதாஸ் இயக்குகிறார்.

தல 58

தல 58

அஜீத் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் தல57 படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் தல 58 படத்தை முருகதாஸ் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வதுபோல மிரட்டல் படத்தின் அஜீத் போஸ்டரை, தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் முருகதாஸ் அப்டேட் செய்திருக்கிறார்.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

English summary
Sources Said Ajith team up with A.R.Murugadoss for Thala 58.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil