Don't Miss!
- Finance
பட்ஜெட் 2023: உங்க சம்பளத்துக்கு வரிச் சேமிப்பு எவ்வளவு..? புட்டு புட்டு வைக்கும் தகவல்..!
- Lifestyle
தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?
- News
காவி நிறத்தில் குடுமி- பூணூலோடு பிராமின் குக்கீஸ்.. பிஸ்கெட்டிலும் ஜாதியமா? நெட்டிசன்கள் கொந்தளிப்பு
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
துணிவு திரைப்படம் ரிலீஸாவதில் திடீர் சிக்கல்... ஷாக்கான அஜித் ரசிகர்கள்... இதுதான் காரணமா?
சென்னை: பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே தினத்தில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
அஜித் - விஜய் திரைப்படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கல் போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் ரேஸில் அஜித்தின் துணிவு
அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனையடுத்து அஜித் - ஹெச் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு, வரும் 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேநேரம் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதே 11ம் தேதி ரிலீஸாகிறது.

ரிலீஸ் தேதியில் மாற்றம்?
அஜித்தின் துணிவு திரைப்படம் வங்கி கொள்ளையை பின்னணியாக வைத்து ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. துணிவு ட்ரெய்லரில் கூட தாறுமாறான ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை சிலிர்க்க வைத்தன. அதேநேரம் வாரிசு ட்ரெய்லர் வெளியானதில் இருந்து, ரசிகர்களிடம் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாம். வாரிசு திரைப்படம் ஃபேமிலி சென்டிமெண்டலாக இருக்கும் என்பதால் தான் இந்த மாற்றம் என சொல்லப்படுகிறது. இதனால், துணிவு படத்தை ஒருநாள் முன்னதாக 10ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திடீரென வந்த சிக்கல்
இந்த நிலையில் தான் துணிவு திரைப்படம் வெளியாவதில் திடீரென சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். முன்னதாக சென்சாருக்கு சென்ற துணிவு படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதனை அதிகாரிகள் கட் செய்து பீப் வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. அதேபோல் சில ஆக்ஷன் காட்சிகளில் Violence அதிகம் இருப்பதாகவும் சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளார்களாம். மேலும் இதன் காரணமாக தான் துணிவு படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், Violence, கெட்ட வார்த்தைகள் அதிகம் இருப்பதால், துணிவு படத்தை சவுதி அரேபியாவில் ரிலீஸ் செய்ய அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்
இந்த செய்தியால் சவுதியில் உள்ள அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். சவுதி அரேபியாவில் துணிவு படத்தை எதிர்பார்த்து இருந்த ரசிகர்கள், இந்த தடை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா என எதிர்பார்த்துள்ளனர். சமீபத்தில் மோகன்லாலின் மான்ஸ்டர் திரைப்படமும் சவுதியில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மேலும் சில திரைப்படங்கள் அதிக Violence இருப்பதாகக் கூறி சவுதியில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.