வாரிசால் உஷாரான ஏகே 61 டீம்...ஷுட்டிங் இப்போ எங்கே நடக்குது தெரியுமா?
சென்னை : வலிமை படத்தை தொடர்ந்து வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட ஹெச்.வினோத் இயக்கும் த்ரில்லர் படமான ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார்.
Recommended Video
இந்த படம் பற்றி பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. அஜித் பிறந்தநாள், ஸ்ரீதேவி பிறந்தநாள் என முக்கிய நாட்களில் அப்டேட் வரும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களைத் தொடர்ந்து புனேயில் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடத்தப்படும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இறுதிக்கட்ட ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் நடப்பதாகவும், இதில் கலந்து கொள்வதற்காக அஜித் புறப்பட்டு சென்றிருப்பதாகவும் மற்றொரு தகவல் வெளியானது.

இங்கு தான் ஏகே 61 ஷுட்டிங் நடக்குதா
ஏகே 61 இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்காக அஜித் விசாகப்பட்டினம் சென்ற போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரலாகின. லேட்டஸ்ட் தகவலின் படி, தற்போது ஆந்திராவின் அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் நடத்தப்பட்டு வரும் ஏகே 61 ஷுட்டிங்கில் அஜித் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது.

செம உஷாராகிட்டாங்க
அரக்கு பள்ளத்தாக்கு பகுதியில் பைக் சண்டை காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ஷுட்டிங் நடக்கும் இடம் முழுவதையும் அடைக்கவும், படக்குழுவில் உள்ள வெகு சிலர் மட்டுமே ஷுட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. புகழ்பெற்ற இந்த பகுதியில் ஒரு வாரம் வரை ஷுட்டிங் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது. விஜய்யின் வாரிசு பட ஷுட்டிங் போட்டோ, வீடியோக்கள் லீக் ஆனதால் ஏகே 61 டீம் உஷாராகி விட்டதாக சொல்லப்படுகிறது.

எல்லாருக்கும் இதுதான் ஃபர்ஸ்ட்
ஏகே 61 படமும் உண்மை சம்பவங்களில் அடிப்படையிலான படம் என்றே சொல்லப்படுகிறது. இதில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜான் கொக்கன், வீரா, அஜய் போன்றவர்கள் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசைக்கிறார். இவர்கள் அனைவருமே அஜித்துடன் முதல் முறையாக பணியாற்றும் படம் இதுவாகும்.

ஏகே 61 டைட்டில் எப்போ வரும்
படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால் விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 61 போஸ்டரின் வரவிற்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால் போனி கபூர் எந்த தகவலும் வெளியிடாததால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

ஒரே சமயத்தில் விஜய் -அஜித் பட ரிலீசா?
ஏகே 61 படத்தை முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவே திட்டமிடப்பட்டது. ஆனால் ஷுட்டிங் தொடர்ந்து தாமதமாகி வருவதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அஜித்தின் ஏகே 61 படமும், விஜய்யின் வாரிசு படமும் ஒரு சமயத்தில் மோதிக் கொள்ளும் நிலை வருமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. ஏகே 61 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதே பொங்கலுக்கு தான் வாரிசு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











