twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத் 46.... - 'தல புராணம்!'

    By Shankar
    |

    அஜித்குமார் பிறந்தது ஹைதராபாத் என்றாலும், முகவரி என்னவோ தமிழகமும் தமிழக ரசிகர்களும்தான். நடிகர், பைக் மெக்கானிக், கார் ரேஸர் என இவருக்குப் பல முகங்கள் உண்டு .

    1971 மே மாதம் 1-ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தார். அப்பா சுப்பிரமணியம், அம்மா மோகினி. கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அஜித்தின் சினிமா நோக்கிய பயணம் ரொம்பவே சுவாரஸ்யமானது. இரு சக்கர வாகன மெக்கானிக்காக தன் இளமைக் காலத்தைத் தொடங்கினார். கார், பைக் ரேஸ்கள் ஈர்க்க தன் கவனத்தை அதன் பக்கம் திருப்பினார். தொடர்ச்சியாக பல்வேறு ரேஸ்களில் கலந்துகொண்டு வந்தவருக்கு, மாடலிங்கும் கை கூடியது. சிறிய பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களின் வாயிலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.

    Ajith turns 46 today

    1990-ல் வெளிவந்த 'என் வீடு என் கணவர்' என்ற தமிழ் திரைபடத்தின் மூலம் பள்ளி மாணவனாக சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து 1993, ஜூலை 16 அன்று வெளியான 'பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் முக்கிய வேடத்தில் அறிமுகமானார். இந்தத் திரைப்படம் 1997-ல் தமிழில் டப் செய்யப்பட்டு 'காதல் புத்தகம்' என்ற பெயரில் தமிழகத்தில் வெளியானது.

    1993-ல் இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளிவந்த 'அமராவதி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அமராவதியில் அஜித்துக்கு பின்னணிக் குரல் கொடுத்தது சியான் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் வெளியான அமராவதி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 1994-ல் வெளியான 'பாசமலர்கள்' திரைப்படத்தில் நடித்தார். அதே ஆண்டில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான 'பவித்ரா' அஜித்துக்கு தமிழ் திரைப்பட உலகில் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

    சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும், மற்றொரு பக்கம் கார், பைக் பந்தயங்களிலும் கலந்துகொண்டு வந்தார்.

    மோட்டார் ரேஸ் ஒன்றில் கலந்து கொண்டபோது, விபத்தில் சிக்கி காயமடைந்தார். பல மாதங்கள் தொடர்ச்சியான ஓய்வு. பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த அஜித்துக்கு 'ஆசை' கைகொடுத்து, மீண்டும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அடுத்த வருடத்தில் வெளிவந்த 'காதல் கோட்டை' வெற்றிகரமாக ஓடி அனைத்து சென்டர்களிலும் வசூலை அள்ளியது. 'உல்லாசம்', 'காதல் மன்னன்' , 'அவள் வருவாளா', 'தொடரும்', 'வாலி', 'நீ வருவாய் என...' போன்ற திரைப்படங்கள் 'அமர்க்கள'மாய் ஓடி, தமிழக ரசிகர்களிடம் அஜித்துகென தனி 'முகவரி'யைப் பெற்றுத் தந்தன.

    2000-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றார். 'அமர்க்களம்' திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஷாலினியைக் காதலித்து கரம் பிடித்தார். அஜித் - ஷாலினி தம்பதியருக்கு 2008-ம் ஆண்டில் முதல் பெண் குழந்தை (அனோஷ்கா) பிறந்தது. இரண்டாவது ஆண் குழந்தைக்கு ஆத்விக் என பெயரிட்டுள்ளனர் (ஆத்விக் ரசிகர் மன்றமெல்லாம் வச்சாச்சு தெரியுமா!).

    சினிமா, மோட்டார் பந்தயங்கள் தவிர்த்து ஏரோ மாடலிங்கிலும், புகைப்படக் கலையின் மீதும் அஜித்துக்கு தீராத காதல் உண்டு. இதுதவிர அஜித் சமைக்கும் பிரியாணிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டாம்!

    - தொகுப்பு: ஆர்ஜி

    English summary
    Today, actor Ajith Kumar turns 45. Here is the complete life story and career history of the actor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X