»   »  வேதாளம் படத்துக்குப் பிறகு அஜீத்துக்கு காலில் ஆபரேஷன்

வேதாளம் படத்துக்குப் பிறகு அஜீத்துக்கு காலில் ஆபரேஷன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேதாளம் பட வேலைகள் முடிந்த பிறகு காலில் ஆபரேஷன் செய்து கொள்ள அஜீத் சம்மதித்துள்ளாராம்.

ஆரம்பம் படத்தில் நடித்த போது நடந்த விபத்தில் அஜீத்துக்கு காலில் அடிபட்டது. கொஞ்ச காலம் தாங்கித் தாங்கி கையில் ஊன்றுகோலுடன் நடந்து வந்தார். ஆரம்பம் முடிந்ததும் ஆபரேஷன் என்றும் கூறப்பட்டது.

Ajith to undergo leg surgery after Vedalam release

ஆனால் தொடர்ந்து வீரம், என்னை அறிந்தால் படங்கள் வந்ததால் அவரால் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள முடியவில்லை. வலி இல்லாததால் அவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

இந்த நிலையில்தான், வேதாளம் படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்கின்போது காலில் பெரும் வலி ஏற்பட, துடித்துப்போனார் அஜீத்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அஜீத் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இப்போதைக்கு தற்காலிக வலி நிவாரணம் கிடைத்துள்ளது அஜீத்துக்கு. உடனடியாக ஆபரேஷன் என்பதால்தான், தன் அடுத்த புதுப்படத்தையும் அறிவிக்காமல் உள்ளார் என்று அஜீத் தரப்பில் தெரிவிக்கிறார்கள்.

English summary
Sources says that Actor Ajithkumar has accepted to undergo leg surgery after the release of Vedhalam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil