»   »  பொங்கலுக்கு மோத வரும் 3 "ஏட்டய்யாக்கள்"... அஜீத், விஷால், சிவகார்த்திகேயன்!

பொங்கலுக்கு மோத வரும் 3 "ஏட்டய்யாக்கள்"... அஜீத், விஷால், சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு ரிலீசாக உள்ள 5 படங்களில் மூன்றில் நாயகர்கள் போலீசாக நடித்துள்ளனர். எனவே, வரும் பொங்கல் ரசிகர்களுக்கு போலீஸ் பொங்கலாக இருக்கப் போகிறது.

அடுத்தாண்டு பொங்கலுக்கு விக்ரமின் ‘ஐ', அஜீத்தின் ‘என்னை அறிந்தால்', விஷாலின் ‘ஆம்பள', கார்த்தியின் ‘கொம்பன்' மற்றும் சிவகார்த்திக்கேயனின் ‘காக்கி சட்டை' உட்பட 5 படங்கள் ரிலீசாக உள்ளன.

இவற்றில் ஐ மற்றும் கொம்பன் தவிர மற்ற மூன்று படங்களிலும் நாயகர்கள் போலீஸ் வேடம் ஏற்று நடித்துள்ளனர்.

என்னை அறிந்தால்...

என்னை அறிந்தால்...

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் ‘என்னை அறிந்தால்'. இப்படத்தின் போஸ்டர்கள் அஜீத் போலீஸ் உடையில் இருப்பது போன்று வெளியாகியுள்ளது.

போலீஸ் அஜீத்...

போலீஸ் அஜீத்...

ஏற்கனவே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் வாழ்க்கையை சுவாரஸ்யமாக தந்தவர் கௌதம் மேனன். இப்படத்தில் கூடுதலாக அஜீத் போலீஸ் வேடத்தில் வருவதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறி உள்ளது.

ஆம்பள...

ஆம்பள...

இதேபோல், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ‘ஆம்பள'. மூன்று அத்தைகள், அவர்களின் மூன்று மகள்கள் இவர்களைச் சுற்றிய கதைக்களம் என தகவல்கள் தெரிவித்தாலும், இப்படத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக வருகிறார் என்பதற்கு போஸ்டரே சாட்சி. எனவே, காமெடி கலந்த த்ரில்லர் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

சிவகார்த்திகேயன்...

சிவகார்த்திகேயன்...

இந்தப் பட்டியலில் அஜீத்தும், விஷாலும் ஏற்கனவே போலீஸ் வேடமேற்று நடித்துள்ளனர். ஆனால், இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் காக்கி சட்டை படம் மூலம் முதல் தடவையாக போலீஸ் வேடம் ஏற்றிருக்கிறார்.

திவ்யா ஜோடி...

திவ்யா ஜோடி...

தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நாயகியாக நடித்த திவ்யா, இப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். எனவே, இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

English summary
The Tamil films lovers will have a wonderful pongal, as the movies of Ajith, Vishal and Sivakarthikeyan is to be released. The three heros are playing police role in their movies.
Please Wait while comments are loading...