»   »  விடிந்தும் விடியாமலும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த அஜீத்

விடிந்தும் விடியாமலும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: விவேகம் படம் ரிலீஸாக உள்ள நிலையில் அஜீத் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜீத். படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்துள்ளதாக சிவா பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

Ajith visits Tirupati temple

இந்நிலையில் அஜீத் இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்கு நடந்த சுப்ரபாத சேவையில் அவர் கலந்து கொண்டார்.

காலையிலேயே அஜீத்தை கோவிலில் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அஜீத் ரசிகர்களின் உணர்ச்சிகளை மதித்து அவர்களுடன் கைகுலுக்கினார்.

சிலர் அஜீத்துடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். ஒரு படத்தை துவங்கும்போதும், ரிலீஸுக்கு முன்பும் அஜீத் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Ajith has visited Tirupati temple on tuesday after completing his Vivegam shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil