»   »  ஆரம்பம்... சிறப்புக் காட்சி பார்த்து ரசித்த அஜீத்... உடன் நடித்த ஆர்யாவுக்கு பாராட்டு மழை!

ஆரம்பம்... சிறப்புக் காட்சி பார்த்து ரசித்த அஜீத்... உடன் நடித்த ஆர்யாவுக்கு பாராட்டு மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு வெளியாகும் தன் ஆரம்பம் படத்தின் சிறப்புக் காட்சியினை நேற்று சென்னையில் பிரிவியூ தியேட்டரில் பார்த்தார் நடிகர் அஜீத்.

ஸ்ரீ சத்ய சாய் நிறுவனத்தின் சார்பில் ரகுராம் தயாரிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜீத் குமார் -ஆர்யா நடிப்பில் உருவான 'ஆரம்பம்' படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்தியேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கினர்.

சிறப்புக் காட்சி

சிறப்புக் காட்சி

இந்த மாதம் 31ஆம் தேதி உலகெங்கும் வெளியாகவிருக்கிறது ஆரம்பம். இந்தப் படம் வெளியாகும்போது அஜீத் ஊரில் இருக்கமாட்டார். காரணம் வருகிற 20 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை 'வீரம்' படத்தின் இடைவிடாத படப்பிடிப்புக்கு ஹைதராபாத் செல்கிறார்.

எனவே முன்கூட்டியே படத்தைப் பார்க்க விரும்பினார் அஜீத். அவரது விருப்பப்படி தயாரிப்பு நிறுவனம் ஒரு பிரத்தியேகக் காட்சியை போர்பிரேம்ஸில் திரையிட்டனர்.

விஷ்ணுவர்தனுக்கு பாராட்டு

விஷ்ணுவர்தனுக்கு பாராட்டு

அஜீத் தனது குடும்பத்தினர் மற்றும் தயாரிப்பாளருடன் படத்தைப் பார்த்தார். படத்தை மிகவும் ரசித்த அஜீத் குமார் காட்சி முடிந்தவுடன் இயக்குனர் விஷ்ணுவர்தனை மனமார பாராட்டினார். அதற்க்கு பின்னர் ஆர்யாவை தொலைபேசியில் நலம் விசாரித்ததோடு, அவரது நடிப்புக்கு தன பாராட்டையும் தெரிவித்தார்.

உங்க நடிப்பை ரசிச்சேன் ஆர்யா!

உங்க நடிப்பை ரசிச்சேன் ஆர்யா!

'இந்த படத்தில் உங்க நடிப்பு மிகவும் பிரமாதம். நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன் .திரையில் நீங்கள் டாப்சியுடன் தோன்றும் காட்சிகள் இளமை, அழகு.. எல்லோரையும் கவரும் வண்ணம் உள்ளது. இந்தப் படம் உங்களை நிச்சயம் ஒரு புதிய உயரத்துக்கு கூட்டிச் செல்லும். தொடர்ந்தது வெற்றி படங்களை குவித்து வரும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்றார்.

ஆர்யா நெகிழ்ச்சி

ஆர்யா நெகிழ்ச்சி

பதிலுக்கு ஆர்யாவும் 'இந்த பாராட்டு என்னை ஊக்குவிக்கிறது. உங்களுடன் பணிபுரியும் வாய்ப்பு எப்போது கிடைத்தாலும் நிச்சயம் நடிக்க வருவேன்' என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஏ எம் ரத்னம்

ஏ எம் ரத்னம்

இவர்களின் உரையாடலை உடனிருந்து கேட்ட நிர்வாக தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், "இந்த பரஸ்பர மரியாதை தமிழ் திரை உலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும்," என்றார்.

English summary
Actor Ajith watched the special show of his Diwali release Arrambam on Friday with his family.
Please Wait while comments are loading...