மைக்கேல் ஜாக்சனோடு அஜித் மனைவி ஷாலினி எடுத்துக் கொண்ட புகைப்படம்.. பிறந்த நாளில் கலக்குறாரே!

சென்னை: உலக அளவில் பாப் பாடலில் சூப்பர் ஸ்டார் என்றால் அது மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் தான். 16 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2009ஆம் ஆண்டே மறைந்துவிட்டாலும் அவர் என்றைக்கும் கொண்டாடப்படும் ஐகான். அப்படி இருக்கையில் மைக்கேல் ஜாக்சனின் 67வது பிறந்த நாளில் அவரது மெழுகுச் சிலையுடன் நடிகை ஷாலினி எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் எப்படி சாதியப்பாகுபாடு உள்ளதோ, அதேபோல் இனப்பாகுபாடு பார்த்த அமெரிக்காவில் கடந்த 1958ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தார். மைக்கேல் அடிப்படையில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் என்றாலும் புகழும் செல்வமும் கூட கூட அவர் தனது நிறத்தை வெள்ளையாக மாற்றிக் கொள்ள பல சிகிச்சைகளை செய்து கொண்டார். இது விமர்சனத்திற்கு ஆளானாலும் அது அவரது தனிப்பட்ட விருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

Ajith Wife Shalini Ajithkumar Share Photo With Michael Jackson and Says Birthday Wishes
Photo Credit:

மைக்கேல் ஜாக்சன் இசை உலகில் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் அளப்பரியது. அது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது. மைக்கேல் மறைந்த போது அவருக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத பல நாடுகளில் இருந்த அவரது ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக அவரை இலுமினாட்டிகள் தான் கொன்றுவிட்டார்கள் என்று கூறுபவர்களையும் பார்க்க முடியும்.

முடி சூடா மன்னன்: மைக்கேலின் பாப் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற ஆல்பங்கள் என்றால், Thriller உலகின் அதிகம் விற்பனையான ஆல்பமாக இன்றும் கருதப்படுகிறது. இது 70 மில்லியனுக்கும் மேல் பிரதிகள் விற்பனை ஆகியுள்ளது. இந்த பட்டியலில், Beat It, மற்றும் Billie Jean ஆகியவையும் அடங்கும். ஜாக்சனின் மூன் வாக் என்பது உலக பிரசித்தி பெற்றது. அவர் மேடையில் இப்படித்தான் மூன் வாக் செய்திருப்பார், இந்த ட்ரிக்கைப் பயன்படுத்திதான் அவர் தனது உடலை தரையை நோக்கி சாய்த்திருப்பார் என்று இன்றைக்கு பலரும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் அவையெல்லாம் கற்பனை என்றுதான் கூறவேண்டும். மைக்கேல் தனது ரசிகர்களை ஏமாற்றியது இல்லை. அப்படி அவர் ரசிகர்களை ஏமாற்றி இருந்தால், அவர் உயிருடன் இருந்த காலத்திலேயே அம்பலப்பட்டிருப்பார்.

உலக சாதனை: ஜாக்சன் தனது வருமானத்தின் மூலம் பல நாடுகளில் இருந்த தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்துள்ளார். 39 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்துள்ளார். மேலும் Heal the World என்ற அவரது பாடல் உலக அமைதி மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தியதாக அமைந்தது. ஜாக்சன் 13 கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். இதில் 'ஒரே ஆண்டில் அதிக கிராமி விருதுகள்' 1984-ல் 8 விருதுகள் வென்றதும் அடங்கும்.

Ajith Wife Shalini Ajithkumar Share Photo With Michael Jackson and Says Birthday Wishes
Photo Credit:

ஷாலினி வாழ்த்து: மைக்கேல் தனது 50வது வயதில் மரணமடைந்தார். ஆனால் அவரது இசைப் பயணம் அவரை இந்த உலகம் உள்ளவரை நினைவில் வைத்திருக்கும் படியாக அமைந்துள்ளது. இன்று அவரது பிறந்த நாள் அவருக்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். பல நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் கூட நடக்கிறது. இந்நிலையில் நடிகையும் நடிகர் அஜித்குமாரின் மனைவியுமான ஷாலினி மைக்கேலின் மெழுகு சிலை உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X