»   »  அம்மாடி, ஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்

அம்மாடி, ஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஒரு வழியாக சிவாவை கைவிடும் அஜீத்

சென்னை: அஜீத் விசுவாசத்தை அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கப் போவது இல்லை என்று கூறப்படுகிறது.

வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத், இயக்குனர் சிவா மீண்டும் கூட்டணி சேர்ந்த படம் விவேகம். விவேகம் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

தல ரசிகர்களாலேயே படத்தை பார்த்துவிட்டு இது என்ன மொக்கையாக இருக்கு என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

வேண்டாம்

வேண்டாம்

விவகேம் படத்தை பார்த்த ரசிகர்கள் கடவுளே அடுத்த படத்தில் அஜீத் சிவாவுடன் மட்டும் சேரவே கூடாது என்று பிரார்த்தனை செய்தனர். ஆனால் அவர்கள் எது நடக்கக் கூடாது என்று நினைத்தார்களோ அதுவே நடந்துவிட்டது.

சிவா

சிவா

விவேகம் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்கிறார் அஜீத். வேண்டாம் தல, சிவாவை விட்டுடுங்க தல என்று ரசிகர்கள் கதறியது அஜீத் காதில் விழவில்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சரி நடந்தது நடந்துவிட்டது, அடுத்த படத்திலாவது சிவாவை கழற்றிவிடுங்கள் என்று ரசிகர்கள் அஜீத்துக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை நிறைவேறிவிடும் போல.

புதுப்படம்

புதுப்படம்

பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களில் அஜீத்துடன் பணியாற்றிய விஷ்ணுவர்தன் மீண்டும் தலயை வைத்து ஒரு படத்தை எடுக்க ஆசைப்படுகிறார். விசுவாசம் படத்தை அடுத்து அஜீத் விஷ்ணுவர்தன் படத்தில் நடிக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

காரணம்

காரணம்

விவேகம் ஓடாதபோதும் மீண்டும் சிவாவுக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு அஜீத் ஒரு காரணம் தெரிவித்துள்ளார். சிவா வேறு ஒரு நடிகரிடம் கதை சொல்லப் போகும்போது ஹிட் பட இயக்குனராக போக வேண்டும். அதற்காகவே மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளேன் என்று அஜீத் தெரிவித்துள்ளார்.

English summary
Buzz is that Ajith has finally decided to ditch Siva and to work with another director. Ajith might work with director Vishnuvardhan after completing his current project Viswasam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil