»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் சங்க கடனை அடைக்க சங்கத் தலைவர் விஜயகாந்த், அஜீத், முரளி, ராதிகா,குஷ்பு ஆகியோர் மொத்தம் 24 லட்சம் ரூபாய் உதவி அளித்துள்ளனர்.

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவதற்காக வங்கியில் 20லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டது. பின்னர் இத் தொகை வட்டியுடன் சேர்ந்துஇப்போது 4 கோடியே 25 லட்சமாக உயர்ந்துவிட்டது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப்போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஜயகாந்த், சில நாட்களுக்கு முன்பு நடிகர்,நடிகைகளின் அவசரக் கூட்டச்தைக் கூட்டினார்.

அக் கூட்டத்தில், நடிகர் சங்கக் கடனை அடைப்பது பற்றி தீவிர ஆலோசனைநடத்தப்பட்டது. ஆலோசனையின் முடிவில், நடிகர் சங்கக் கடனை நடிகர்,நடிகைகளிடமிருந்து நிதி உதவி பெற்று அடைப்பது என்றும், அரசிடமிருந்து நிதிஉதவி பெறுவதில்லை என்றும். நிதி திரட்டுவதற்காக நட்சத்திர விழா நடத்துவதில்லைஎன்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நடிகர் அஜீத்குமார், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.அவரை அடுத்து விஜயகாந்த் 5 லட்சம் ரூபாய், ராதிகா 3 லட்ச ரூபாய், குஷ்பு 1 லட்சரூபாய் என மொத்தம் 24 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil