»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகின் முன்னணி வரிசையில் உள்ள ஹீரோக்களில் ஒருவர் அஜீத். அமராவதியில் அறிமுகமாகி, சிட்டிசன் படம் வரை வித்தியாசமான கெட்டப்களில் நடித்து, நடிப்பில் தனி சாம்ராஜ்யத்தைஅமைத்துக் கொண்டிருப்பவர்.

உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதிதான் இவரது பிறந்தநாள். சென்ற முறை சென்னையில் தனது காதல்மனைவி ஷாலினியுடன் பிறந்த நாள் கொண்டாடியபோது ஏற்பட்ட ரசிகர்களின் அன்புத் தொல்லை காரணமாக,இந்த முறை அவர்களிடமிருந்து தப்பிக்க, ரஜினி ஸ்டைலைப் பின்பற்றத் தொடங்கி விட்டார்.

ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல சென்னைக்கு வர வேண்டாம். நான் வெளியூரில் படப்பிடிப்பில்இருப்பதால், ரசிகர்கள் அவரவர்களால் இயன்ற அளவுக்கு உதவிகளை பிறருக்கு செய்யவும்.

கண் தானம், ரத்த தானம் ஆகியவை மிகவும் நல்ல விஷயங்கள். எனது பிறந்த நாளான இன்று ரசிகர்களுக்குஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தாய், தந்தையரை வணங்குவதும் தன் குடும்பத்தை நல்ல முறையில்கவனித்துக் கொள்வதும் தான் முக்கியம்.

தாய், தந்தையர், குடும்பத்தினர் இவர்களுக்குப் பிறகுதான் நடிகர் அஜீத் என்று உருக்கமாக ரசிகர்களுக்குவேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று அஜீத் தெளிவுபடுத்தியுள்ளார். எனது ரசிகர்கள் எல்லாக்கட்சிகளிலுமே உள்ளனர். எனக்கு அனைத்து அரசியல் தலைவர்களையும் பிடிக்கும். நான் எந்த அரசியல்சாயத்தையும் பூசிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் தெளிவாக.

முன்பு ஒரு நாளிதழுக்கு அஜீத் அளித்த பேட்டியில், நான் அடிக்கடி சிங்கப்பூருக்கு சென்றிருக்கிறேன். அங்கேதெருக்கள், சாலைகள் மிகவும் சுத்தமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சென்னையில்குப்பைகளை கொட்டுவதற்கே இடமில்லை என்றிருக்கிறார்.

யாரைத் தாக்குகிறார் அஜீத்? யாரை ஆதரிக்கிறார்? எது எப்படியோ, அஜீத்திற்கு நாம் பிறந்த நாள்வாழ்த்துக்களைக் கூறுவோம்.

Read more about: actor, ajith kumar, shalini, tamil cinema
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil