We want Valimai...டிக்கெட் புக்கிங்கிற்கே இந்த அலப்பறையா...தியேட்டர் சும்மா கிழிய போகுது

சென்னை : வலிமை படம் பார்ப்பதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய தியேட்டருக்கு வந்த அஜித்தியன்ஸ் We want Valimai என கோஷம் எழுப்பி அதகளப்படுத்தி உள்ளனர். அஜித் ரசிகர்கள் கொடுத்த அலப்பறையில் போலீஸ் பாதுகாப்புடனேயே டிக்கெட் புக்கிங் நடைபெற்றுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமான வலிமை பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் ரிலீசாகும் வலிமை தான் உலக அளவில் அதிக தியேடே்டர்களில், மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்படும் அஜித்தின் முதல் படமாகும்.

வலிமை கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு

வலிமை கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு

வலிமை ரிலீசிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், இந்த படத்திற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பெங்களூருவில் இன்று மாலை நடைபெற உள்ளது. சவுதி அரேபியா, அமெரிக்கா, மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் மட்டுமின்றி, இந்தியாவில் வலிமை வெளியாகும் தியேட்டர்களின் பட்டியல் பத்திரிக்கை வளிம்பரத்துடன் வெளியிடப்பட்டு வருகிறது. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர் போனி கபூரும் தனது பங்கிற்கு தினம் ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அசர வைத்து வருகிறார்.

வலிமை டிக்கெட் துவங்கியது

வலிமை டிக்கெட் துவங்கியது

வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 24 மட்டுமின்றி தொடர்ந்து முதல் நான்கு நாட்களுக்கு அதிகாலை 4 மணி ஷோவை திரையிட படக்குழு அனுமதி பெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் காலை 5 மணிக்கு ரசிகர்கள் ஷோ திரையிடப்பட உள்ளது. இதனால் வலிமை படத்திற்கான டிக்கெட் புக்கிங் நேற்று துவங்கி உள்ளது.

வீ வான்ட் வலிமை

வீ வான்ட் வலிமை

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் வலிமை டிக்கெட் புக் செய்வதற்காக ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். டிக்கெட் புக்கிங் துவங்குவதற்கு முன், வெகு நேரமாக காத்திருந்து பொறுமை இழந்த அஜித்தியன்ஸ், We want Valimai என கோஷம் போட துவங்கினர். அஜித் ரசிகர்கள் செய்த அலப்பறையில் டிக்கெட் கவுண்ட்டர் ஏரியாவே அதகளப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் போலீசார் வரவழைக்கப்பட்டு, வரிசையை ஒழுங்குபடுத்தி, டிக்கெட் புக்கிங் நடத்தப்பட்டது.

டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படியா

டிக்கெட் புக்கிங்கிற்கே இப்படியா

ரசிகர்கள் கோஷமிட்டு உற்சாகம் காட்டிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதை பார்த்த மற்றவர்கள், டிக்கெட் புக்கிங்கிற்கே இந்த அலப்பறையா...அப்படியானால் பட ரிலீஸ் அன்றைக்கு தியேட்டருக்குள் போய் என்னவெல்லாம் செய்ய போகிறார்களோ. வலிமை ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் சும்மா தெறிக்க போகுது என ஆச்சரியமாக சொல்லி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X