Ajith Kumar: சம்பளம் வேண்டாம்னு சொன்ன அஜித்.. ஷாக் ஆன தயாரிப்பாளர்.. டிராப் ஆகுதா AK64?

சென்னை: நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் தீவிரமாக கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கையில் இவரது அடுத்த படம் செப்டம்பர் மாத இறுதியிலோ அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் தொடங்கும் என கூறப்பட்டது. இப்படி இருக்கையில் படம் டிராப் ஆக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. அந்த படம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது. படம் பார்த்த ஒவ்வொரு அஜித் ரசிகரும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடினார்கள். ஆதிக்கும் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் குஷியானார்கள்.

Ajithkumar Aadik Ravichandran Movie Maybe Drop Because Of Ajith Ask OTT Rights And Sattalaite Rights For Salary
Photo Credit:

என்ன பிரச்னை: இப்படி இருக்கையில் தற்போது படம் டிராப் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை அஜித் தனது சம்பளத்துக்கு பதிலாக கேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது. இதனால் படத்தின் தியேட்டரிக்கல் வசூல், ஆடியோ ரைட்ஸ் போன்ற மற்ற வியாபாரங்களை தயாரிப்பாளர் பார்த்துக் கொள்ளட்டும் என கூறிவிட்டாராம். இதனால் படத்தை தயாரிக்க உள்ளார் என்று கூறப்பட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் , படத்தை தயாரிப்பதில் இருந்து பின் வாங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ajithkumar Aadik Ravichandran Movie Maybe Drop Because Of Ajith Ask OTT Rights And Sattalaite Rights For Salary
Photo Credit:

படம் டிராப்பா?: அதாவது படத்தை தயாரிக்க படத்தின் ஓடிடி ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸைக் காட்டித்தான் பணத்தை புரட்ட நினைத்துக் கொண்டு இருந்தாராம். இப்படியான நிலையில் அஜித் தனது சம்பளத்துக்கு பதிலாக ஓடிடி ரைட்ஸ் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸைக் கேட்டதால் தற்போது பணம் புரட்ட முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறாராம். அதனால்தான் படத்தில் இருந்து தான் வெளியேறி விடலாம் என முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது. இந்த தகவலை வலைபேச்சு அந்தணன் வலைபேச்சு யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X