Ajith: GBUவில் நடிக்க வந்த ஜூனியர் நடிகர்.. அஜித் செய்த நல்ல காரியம்.. தல யூ ஆர் கிரேட்!
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படி இருக்கையில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பின்போது, ஜூனியர் நடிகர் ஒருவருக்கு அஜித் செய்த நல்ல விஷயம் குறித்து வலைபேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டம் பார்த்த ஒவ்வொரு அஜித் ரசிகரும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனை கொண்டாடினார்கள். ஆதிக்கும் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதால் படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். படமும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் குஷியானார்கள்.
குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் நடிக்க வந்த டெல்லியைச் சேர்ந்த ஜூனியர் நடிகர் ஒருவரின் நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்த அஜித், அவரை அழைத்துப் பேசியுள்ளார். குறிப்பாக அந்த ஜூனியர் நடிகர் கருப்பு கண்ணாடியை போட்டுக்கொண்டு படப்பிடிப்பு முழுவதும் அவர் நடந்து கொண்ட போதே, அந்த நடிகருக்கு பார்வை ரீதியாக ஏதோ பிரச்னை உள்ளது என்பதை அஜித் உணர்ந்து கொண்டுள்ளார். அதன் பின்னர்தான் அந்த ஜூனியர் நடிகரை அழைத்து பேசியுள்ளார். மேலும் தன்னை கேரவனில் வந்து சந்திக்கும் படியும் கூறியுள்ளார்.

ஜூனியர் நடிகர்: கேரவனுக்குள் சென்ற அந்த ஜூனியர் நடிகரிடம் கண்ணாடியைக் கழட்டச் சொல்லி கேட்டுள்ளார் அஜித். அவரது ஒரு கண் முழுவதும் செயலிழந்துவிட்டதை உணர்ந்த அஜித், உடனே படக்குழுவிடம் சொல்லி, தனது சொந்த செலவில் அவரை ஹைதராபாத்தில் உள்ள கண் பார்வைக்கு சிறப்பான மருத்துவம் கொடுக்கும் மருத்துவமனையில் சேர்த்து, தினமும் கவனித்து வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஜூனியர் நடிகரை படத்தில் நடிக்க கமிட் செய்த ஏஜென்ட், அந்த ஜூனியர் நடிகரை அழைத்து மிரட்டி உள்ளார்.
கடுப்பான அஜித்: அதாவது, நடிகருடன் பேசக்கூடாது என்பதை மீறி பேசிவிட்டாய். நீ இப்போதே மருத்துவமனையில் இருந்து வெளியேறாவிட்டால் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுக்க மாட்டேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த ஜூனியர் நடிகர் உடனே மருத்துவமனையில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போக, அஜித் இந்த விஷயத்தை கேட்டு ஷாக் ஆனது மட்டும் இல்லாமல் அந்த ஜூனியர் நடிகரை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளார்.

கண் பார்வை: இதனால் அந்த ஜூனியர் நடிகரை தேடிப்பிடித்து கண்டுபிடித்து, கொண்டு வந்து அஜித் கண்முன் நிறுத்தி உள்ளார்கள். அதன் பின்னர் அஜித் அந்த ஜூனியர் நடிகரை சென்னைக்கு வரவழைத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில், அனுமதித்துள்ளார். அந்த ஜூனியர் நடிகருக்கான மருத்துவம் என்பது சுமார் 6 மாத காலம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அஜித் அவரை தனது மேற்பார்வையிலேயே பார்த்து வருகிறாராம். இந்த தகவலை வலைபேச்சு அந்தணன் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார். இதைக் கேள்விப்பட்ட பலரும் அஜித்தை பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











