Ajithkumar: இந்தியாவின் பெருமிகு அடையாளமாக மாறி நிற்கும் அஜித்குமார்.. ஸ்பெயினில் தரமான சம்பவம்!

சென்னை: நடிகர் அஜித்குமார் என்றாலே அவரை எப்போதும் நடிகராக மட்டும், யாரும் அடையாளம் கண்டதில்லை. காரணம், அவர் ஒரு பைக் ரேஸர், கார் ரேஸர், பைக் ரைடரும் கூட. இப்படி இருக்கையில் சினிமா, குடும்பம், கார் ரேஸ், பைக் ரேஸ் என்று இருந்த அஜித்குமார், ஒரு கட்டத்திற்கு மேல், இன்னும் சொல்லப்போனால் கடந்த சில ஆண்டுகளாக, கார் ரேஸ், குடும்பம் மற்றும் சினிமா என்று மாற்றி அமைத்துக் கொண்டார். இதனால் இந்தியாவுக்கு அவர் பல்வேறு பெருமைகளையும் ஈட்டி வருகிறார்.

அந்த வரிசையில் ஸ்பெயினில் நடைபெற்ற, 24 மணி நேர கார் ரேஸில் அவரது அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை வென்றுள்ளது. கடந்த ஆண்டு அஜித்குமார் ரேஸிங் என்ற கார் ரேஸிங் அணியை உருவாக்கி அதன் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அஜித்குமார் ரேஸிங் அணி உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற 24 மணி நேர மற்றும் 12 மணி நேர ரேஸ்களில் கலந்து கொண்டது.

Ajithkumar Racing Team Won Third Place Creventic 24H Race At Spain Video Goes Trending

கோப்பைகள்: இதற்கு முன்னர் நடைபெற்ற பல்வேறு நாட்டு பந்தயங்களில் அஜித்குமார் ரேஸிங் அணி மொத்தம் மூன்று முறை பதக்கங்களை வென்றிருந்தது. அதில், இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒரு முறை இரண்டாவது இடத்தையும் வென்றது. அதாவது, " துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடத்தை வென்றது. அதேபோல், பிரான்சில் நடைபெற்ற 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடத்தையும், அதன் பின்னர் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடத்தையும் வென்றது.

பெருமை: இந்நிலையில் கடந்த 27 மற்றும் 28 தேதிகளில் நடைபெற்ற Creventic 24H என்ற ரேஸில் அஜித்குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டது. ஸ்பெயினில் நடைபெற்ற இந்த போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை வென்றுள்ளது. இதன் மூலம் அஜித்குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அஜித்குமாரின் ரேஸிங் அணிக்கும் அஜித்தும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். மேலும் பரிசுக் கோப்பையை வாங்கும்போது, தனது அணியினர் மற்றும் குடும்பத்தினரை அஜித் மேடையேற்றி அழகு பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அஜித்துக்கு அண்மையில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X