For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தல அஜித் தான் காரணம்.. ரெட் ஸோன்களில் கொரோனாவை எதிர்க்க போராடும் ட்ரோன்கள்.. டாக்டர் பளிச்!

  |

  சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள சென்னையில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகளை தெளித்து, கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்கிற ஐடியாவை நடிகர் அஜித் தான் கொடுத்தார் என டாக்டர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

  Ajith படங்களில் நடிக்க துண்டில் போடும் நடிகைகள் | Samantha

  சினிமாவை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராஃபி என பல திறமைகளை கொண்டிருக்கும் நடிகர் அஜித், தக்‌ஷா எனும் அண்ணா பல்கலைக் கழகத்தின் ட்ரோன் குழுவுக்கு அறிவுரை வழங்கும் ஆசிரியராகவும் இருந்து வருகிறார்.

  சமீபத்தில் டாக்டர் கார்த்திக் அளித்த பேட்டி வைரலான நிலையில், #AJITHLedDroneToFightCorona என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  இப்பதானே மீட் பண்ணினாங்க.. நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனா.. ரசிகர்கள் திடீர் கவலை!

  ரெட் ஸோன்

  ரெட் ஸோன்

  உலகளவில் பல லட்சம் உயிர்களை பலி கொண்டுள்ள இந்த கொரோனா வைரஸ், தமிழகத்தையும் படாத பாடு படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவே இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் இருந்து இன்று கடவுள் தான் காப்பாத்த வேண்டும் என கூறும் நிலைக்கு தமிழ்நாடு முழுவதும் ரெட் ஸோனாக மாறும் நிலை உருவாகி இருக்கிறது. அதிலும், சென்னையில் தான் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது.

  பைக்கிலேயே சென்று

  பைக்கிலேயே சென்று

  சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு எப்படியாவது பைக்கிலேயே தப்பிச் சென்று விட வேண்டும் என தற்போது போட்டிருக்கும் லாக்டவுனுக்கு முன்னதாகவே, பல ஆயிரக் கணக்கான மக்கள் சென்னையில் இருந்து கொரோனாவையும் அழைத்துக் கொண்டு, மற்ற ஊர்களுக்கும் பரப்பி உள்ளனர். சென்னையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் மீண்டும் லாக்டவுன் போடும் நிலை உருவாகி உள்ளது.

  தல அஜித்

  தல அஜித்

  நடிகர் அஜித் என்று மட்டும் சொல்லிவிட முடியாத அளவுக்கு பல சிறப்பு இயல்புகளை கொண்டு, அமைதியாக ஆற்ற வேண்டிய காரியங்களை செயலாற்றி வருகிறார் அஜித். அஜித்தின் படிப்பை பற்றி கிண்டல் செய்தவர்கள் எல்லாம், இன்று, அவர் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களுக்கு, ஹைடெக் ட்ரோன்கள் பற்றி எடுக்கும் வகுப்புகளை பார்த்து வாய் பிளந்துள்ளனர்.

  அஜித் தான் ஐடியா கொடுத்தார்

  அஜித் தான் ஐடியா கொடுத்தார்

  சென்னையில் பல ஏரியாக்கள் ரெட் ஸோன்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் பரவி இருக்கும் கொரோனா வைரஸை எதிர்த்து போராட ஏன் ட்ரோன்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஆலோசனையை நடிகர் அஜித் தான் கொடுத்தார் என டாக்டர் கார்த்தி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியிலும் தக்‌ஷா குழு செயலாற்றியது குறிப்பிடத்தக்கது.

  கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

  கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்

  நடிகர் அஜித்தின் தக்‌ஷா குழு, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தகவல் அறிந்த அஜித் ரசிகர்கள், #AJITHLedDroneToFightCorona என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தல அஜித்துக்கு நன்றியையும் பாராட்டுக்களையும் சொல்லி வருகின்றனர். நடிகராக மட்டும் இல்லாமல், நல்ல மனிதராகவும் இருக்கீங்க என பல வித போஸ்ட்களை போட்டு வருகின்றனர்.

  இதுதான் இன்ஸ்பிரேஷன்

  இதுதான் இன்ஸ்பிரேஷன்

  மருத்துவர் கார்த்திக்கின் சுகரதனா மையத்துடன் இணைந்து, கொரோனா வைரஸை மேலும் பரவவிடாமல் தடுக்கும் கிருமி நாசினிகளை தக்‌ஷா குழுவினரின் ட்ரோன்களை வைத்து தடுக்க ஆலோசனை வழங்கி அதனை செயல்படுத்தியும் வரும் நடிகர் அஜித்தின் இந்த செயல் தான் இளைஞர்களுக்கு ரியல் இன்ஸ்பிரேஷன் என அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்கின்றனர்.

  ரசிகர்கள் சண்டை

  ரசிகர்கள் சண்டை

  நடிகர் அஜித்தின் சாதனைகளை ஒரு புறம் அஜித் ரசிகர்கள் பெருமையாக பேசி வந்தாலும், மறுபுறம் வழக்கம் போல், நடக்கும் ரசிகர்கள் சண்டைகளும் இந்த ஹாஷ்டேக்கில் களைகட்டி வருகிறது. நடிகர், ரேஸர், ட்ரோன் டிசைனர், ஷூட்டர், ஆலோசகர் என அஜித்தை பற்றியும் வெறும் டான்ஸர் மட்டுமே விஜய் என கலாய்த்தும் வருகின்றனர். பதிலுக்கு, நடிகர், பாடகர், டான்ஸர், சமூக பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுப்பவர், சத்தமில்லாமல் பல உதவிகளையும் செய்து வருகிறார் என விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

  English summary
  Doctor Karthick said in a interview, Ajith idea will implement on fight against with corona virus in red zone area. His Dhaksha team work tirelessly for the good cause.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X