»   »  சன்டேன்னா சண்டையாப்பா?: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க

சன்டேன்னா சண்டையாப்பா?: தல, தளபதி ரசிகர்கள் ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் திறமைகளைப் பற்றி பலரும் ட்விட்டரில் பேசி வருவதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜீத் ரசிகர்கள் பலர் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் திறமைகளைப் பற்றி ட்விட்டரில் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஏராளமானோர் அஜீத் பற்றி ட்வீட் செய்வதால் #AJITHTheMultiTalentedIcon என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

அஜீத் பற்றிய ட்வீட்டுகளில் சில இதோ,

வாழும் வரலாறு

வாழும் வரலாறு எங்க தலய பாரு.... தாறுமாறு.. #AJITHTheMultiTalentedIcon என ஐஸ்வர்யா என்பவர் ட்வீட் செய்துள்ளார்.

பைலட் உரிமம்

பைலட் உரிமம் வைத்துள்ள ஒரே தென்னிந்திய நடிகர் தல அஜீத் குமார் #AJITHTheMultiTalentedIcon என்று ரியாஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மிஸ்டர் பெர்பெக்ட்

அஜீத்தின் பல்வேறு திறமைகள் பற்றிய புகைப்படங்களை வெளியிட்டு மிஸ்டர் பெர்பெக்ட் என்று ட்வீட் செய்துள்ளார் தமிழ்வேல்ஸ்.

தனியாய்

தனியாய் வந்தார் அன்று
தமிழகமாய் திகழ்கிறார் இன்று :-)))
#AJITHTheMultiTalentedIcon என விக்னேஷ் ட்வீட் செய்துள்ளார்.

தல

நடிப்பில் மட்டுமல்லாது 'தலை சிறந்த' மனிதராகவும் இருப்பதால் தான் இவரை 'தல' என அழைக்கிறார்கள் #AJITHTheMultiTalentedIcon என்று நவீன் க்ரிஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சண்டை ஆரம்பம்

சண்டை ஆரம்பம்

அஜீத் ரசிகர்கள் அவரின் திறமைகளை ட்வீட் செய்வதை பார்த்துவிட்டு விஜய் ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து ட்வீட் செய்து சண்டையை துவங்கியுள்ளனர்.
ட்விட்டரில் சண்டை போடுவதை ஒரு பிழைப்பாகவே வைத்துள்ளனர் அஜீத், விஜய் ரசிகர்கள்.

English summary
#AJITHTheMultiTalentedIcon is trending on twitter as lot of thala fans are talking about his talents. In the meanwhile Vijay fans have started cursing Thala and his fans in twitter.
Please Wait while comments are loading...