Don't Miss!
- News
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரியை மாற்றணும்.. "என் இனிய தமிழ் மக்களே ஏன்?".. ரகசியம் உடைத்த பாரதிராஜா
- Lifestyle
உங்கள் தலைமுடியில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஏகே 61 படத்திற்காக வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் டைரக்டர்... லேட்டஸ்ட் அப்டேட் இது தான்
சென்னை : அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்திற்காக பார்த்து பார்த்து நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறார் டைரக்டர் ஹச்.வினோத். அடுத்ததாக இந்த படத்தில் இணைந்துள்ள பிரபலம் பற்றிய லேட்டஸ்ட் அப்பேட் அனைவரையும் அசர வைத்துள்ளது.
கொரோனா காரணமாக அஜித்தின் வலிமை படம் இரண்டு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தனர். புதிய ரிலீஸ் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

வலிமை ரிலீஸ் உறுதி
ஆனால் தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுகிழமைகளில் முழு லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வலிமை படம் உறுதியாக ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். வலிமை ரிலீசான கையோடு அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 ஷுட்டிங்கையும் துவக்க போகிறார்களாம். முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் தயாராகி வருகிறதாம்.

ஒரே ஆண்டில் இரண்டு படங்கள்
வலிமை இரண்டு ஆண்டுகள் தாமதமானதை ஈடு செய்வதற்காகவும், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் 2022 ல் அஜித்தின் இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். ஆண்டின் ஆரம்பத்தில் வலிமை படத்தையும், தீபாவளிக்கு ஏகே 61 படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வலிமையை மிஞ்சும் அளவிற்கு ஏகே 61 இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து நடிகர், நடிகைகளை தேர்வு செய்து வருகிறாராம் டைரக்டர்.

ஏகே 61 ல் இணைந்த தபு
ஹச்.வினோத், போனி கபூருடன் அஜித் மூன்றாவதாக இணைந்துள்ள ஏகே 61 ஷுட்டிங் இன்னும் சில வாரங்களில் துவங்கப்பட உள்ளது. இந்த படத்தில் ஹீரோ - வில்லன் என இரு கேரக்டர்களில் அஜித் நடிக்க போகிறாராம். ஏகே 61 படத்தில் மிக முக்கிய கேரக்டரில் நடிகை தபு நடிக்க போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் படத்திற்கு பிறகு 22 ஆண்டுகளுக்கு அஜித் படத்தில் தபு இணைய போகிறார். இதனால் அவர் ஏதாவது ஒரு கேரக்டருக்கு ஜோடியாக இருக்குமோ என்ற கேள்வி பரவி வருகிறது.

அட இவரும் நடிக்கிறாரா
இதைத் தொடர்ந்து அடுத்த அப்டேட்டாக நடிகர் பிரகாஷ்ராஜும் ஏகே 61 படத்தில் இணைய போகிறாராம். மிக முக்கியமாக ரோலில் பிரகாஷ் ராஜ் நடிக்க போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித் நடித்த ஆசை, ராசி, பரமசிவன் ஆகிய படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அதற்கு பிறகு 16 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் அஜித் படத்தில் இணைய போகிறார். பல வருடங்களாக அஜித்துடன் நடிக்காமல் இருக்கும் பிரபலங்களை பார்த்து பார்த்து வினோத் தேடிப்பிடித்து புக் செய்து வருகிறாரே என்ன பிளான் வைத்திருப்பார். அப்படி என்ன கதையை அஜித்திற்காக அவர் உருவாக்கி இருக்கிறார் என ரசிகர்கள் ஆர்வம் பொங்க கேட்டு வருகிறார்கள்.