ஏகே 61 லுக்கா...செம கூல்... செம ஸ்மார்ட்....ஹேண்ட்சம்...தீயாய் பரவும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்
சென்னை : செம ஸ்மார்டான அஜித்தின் ஏகே 61 லேட்டஸ்ட் லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இதை அஜித் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் தற்போது டைரக்டர் ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக ஐதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் நடைபெற்று வருகிறது.
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட ஏகே 61 படத்திற்காக சென்னை மவுண்ட்ரோடு வங்கி போன்று 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பலத்த பாதுகாப்புடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், இரட்டை வேடம் அல்ல. இரட்டை லுக்களில் தான் நடிக்கிறார் என சமீபத்தில் கூறப்பட்டது.

ஏகே 61 ல் இணைந்த பிரபலங்கள்
ஏகே 61 படத்தில் ஒரு மாதமாக அஜித் மட்டுமே நடித்து வந்த நிலையில், சமீபத்தில் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இதில் அஜித்திற்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படும் மஞ்சு வாரியர் இதுவரை ஷுட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை. வெள்ளை தாடியுடன் வயதான லுக், இளமையான லுக் என இரண்டு லுக்களில் அஜித் நடிக்கிறார். வயதான காலேஜ் ப்ரொஃபோசர் ரோலிலேயே அஜித் நடிப்பதாக கூறப்படுகிறது.

முதல் கட்ட ஷுட்டிங் முடிஞ்சிடுச்சா
கடந்த 35 நாட்களாக நடந்து வந்த ஏகே 61 படத்தின் முதல்கட்ட ஷுட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்து விடுமாம். படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதற்காக முழு வீச்சில் படத்தின் ஷுட்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏகே 61 படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளதாம். பாடல் இசையமைக்கும் பணி ஏற்கனவே முடிந்து விட்டதாம். ஆனால் இதுவரை ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளதாம்.

வாவ்...செம ஸ்மார்ட்டா இருக்காரே
இந்நிலையில் அஜித், விமான நிலைய பணியாளர்களுடன் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்து, அவர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் இணையத்தில் செம டிரெண்டாகி வருகிறது. சிம்பிளாக வெள்ளை சட்டை, பேண்ட் அணிந்து, கண்ணில் கூலிங் கிளாஸ், செம ஸ்மார்ட் லுக்கில் அஜித் இருக்கும் இந்த போட்டோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மனுஷன் என்ன அழகா, ஃபிட்டா இருக்காருன்னு பாராட்டி வருகின்றனர். முதல் கட்ட ஷுட்டிங் முடிந்து விட்டதால் அஜித் சென்னை திரும்பும் போது ஐதராபாத் விமான நிலையத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video

டிரெண்டிங்கில் ஏகே 61
ஏகே 61 படத்திற்காக அஜித் 25 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் ஷுட்டிங்கிற்காக அஜித் ஐதராபாத் வந்த போதும் விமான நிலைய ஊழியர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோ செம டிரெண்ட் ஆனது. தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோக்கள் வெளியாகி உள்ளதால் மீண்டும் #AK61 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











