ஏகே 61 ஷுட்டிங் தொடங்கியாச்சு...ஆனா யாரும் அப்டேட் கேட்க கூடாது

சென்னை : வலிமையை தொடர்ந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகி உள்ள படம் வலிமை. இந்த படம் சில விமர்சனங்களை சந்தித்தாலும், ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஓடிடி.,யில் வெளியிடப்பட்டு, அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

ஏகே 61 ஷுட்டிங் துவங்கிடுச்சு

ஏகே 61 ஷுட்டிங் துவங்கிடுச்சு

வலிமை படம் ரூ.232.80 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. வலிமை படத்தின் வசூல் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மூன்றாவதாக ஏகே 61 படத்தில் இதே கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் இன்று ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்

ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்

சென்னை மவுண்ட் ரோடு போன்று ஐதராபாத்தில் செட் அமைத்து, ஷுட்டிங்கை துவக்கி உள்ளனர். சென்னையில் ஷுட்டிங்கை நடத்தினால் மிகப் பெரிய கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் தான் ஐதராபாத்தில் முதல் கட்ட ஷுட்டிங்கை நடத்த பிளான் செய்துள்ளார்கள். ஏகே 61 படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதை எனவும், ஹீரோ-வில்லன் என இரு ரோல்களில் அஜித் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

ஃபிட் தோற்றத்தில் அஜித்

ஃபிட் தோற்றத்தில் அஜித்

ஏகே 61 படத்தின் கதை தான் ஹெச்.வினோத், அஜித்திடம் கூறி ஓகே வாங்கிய முதல் கதையாம். அதற்கு முன் பிங்க் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் கதை ஆகியவை வந்ததால் முதலில் அந்த படங்களை முடித்து விட்டு, தற்போது ஏகே 61 படத்தின் கதையை எடுக்க போகிறாராம். இந்த படத்திற்கு ஃபிட்டான தோற்றம் தான் கரெக்ட்டாக இருக்கும் என வினோத் கூறியதால் தான் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்துள்ளாராம் அஜித்.

2 பாடல்கள் ரெடி

2 பாடல்கள் ரெடி

இந்த படத்திற்காக 2 பாடல்களை தயார் செய்து முடித்து விட்டாராம் இசையமைப்பாளர் ஜிப்ரான். அடுத்ததாக விரைவில் பின்னணி இசை அமைக்கும் பணியை துவங்க போகிறாராம். த்ரில்லர் காட்சிகளுக்கான மிரட்டலான இசையை தயார் செய்ய போகிறாராம்.

போனி கபூர் போட்ட கன்டிஷன்

போனி கபூர் போட்ட கன்டிஷன்

ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என போனி கபூர் கன்டிஷன் போட்டு விட்டாராம். வலிமை படத்தை போல் அடிக்கடி அப்டேட் கேட்க முடியாது. ரசிகர்களையும் அப்டேட் கேட்க வைக்கக் கூடாது என சொல்லி விட்டாராம். அதனால் படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக துவங்கி நடந்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X