அஜித் இல்லாமல் நடக்கும் ஏகே 61 ஷுட்டிங்...எங்கு தெரியுமா?

சென்னை : டைரக்டர் ஹெச்.வினோத், அஜித்தை வைத்து மூன்றாவது முறையாக இயக்கி வரும் படத்திற்கு ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்றது.

வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்திற்கு அங்கு செட் அமைக்கப்பட்டு ஷுட்டிங் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட ஷுட்டிங் புனேயில் நடக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அதற்குள் அஜித் ஐரோப்பாவிற்கு பைக் டூர் சென்றார். பிறகு குடும்பத்துடன் ஜாலியாக வலம் வந்த போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின.

AK 61 shooting held in Chennai without Ajithkumar

அஜித் தற்போது வரை லண்டனில் தான் உள்ளார்.அடுத்த வாரம் தான் இந்தியா திரும்புவார் என சொல்லப்படுகிறது. அஜித் வந்த பிறகு க்ளைமாக்ஸ் உள்ளிட்ட மிக முக்கியமான சீன்கள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.மஞ்சுவாரியருடன் இணைந்து அஜித் நடிக்கும் காட்சிகளும் இங்கு தான் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் வடசென்னை பகுதிகளில் டைரக்டர் ஹெச்.வினோத் ஷுட்டிங் வேலைகளை கவனித்து வந்த போட்டோக்கள் இணையத்தில் பரவியது. இதனால் ஏகே 61 ஷுட்டிங் வடசென்னையில் நடக்க உள்ளதாக தகவல் பரவியதால் மக்கள் பரபரப்பாகினர். அதே போல் ஏகே 61 படத்தின் சில காட்சிகளின் ஷுட்டிங் சென்னையில் நடத்தப்பட்டது. இதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சிலர் இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.

ஆக்ஷன் காட்சிகள் சில எடுக்கப்பட்டதால் அஜித் வருவார் என நினைத்து ரசிகர்கள் ஆவலாக கூடினர். ஆனால் அஜித் இல்லாமல் தான் தற்போது ஏகே 61 ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. சில சிறிய அளவிலாக காட்சிகள் மட்டும் சென்னை வண்டலுருக்கு அருகில் எடுக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மீதிலிருந்து ஒரு கும்பல் கீழ் நோக்கி சுடுவது போன்ற காட்சி தான் படமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் அஜித் திரும்பி வந்ததும் புனேயில் மிக முக்கியமான மற்றும் இறுதிக்கட்ட ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய நடிகர், நடிகைகள் நடிக்கும் சீன்கள் புனேயில் தான் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தில் அஜித்துடன் மஞ்சுவாரியர், ஜான் கொக்கன், வீரா, அஜய், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

செம த்ரில்லிங், ஆக்ஷன், ட்விஸ்ட்கள் நிறைந்த படமாக ஏகே 61 படம் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அஜித் புதிய கெட்அப் ஒன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுவதால், அந்த காட்சிகளை புனேயில் ரகசியமாக எடுக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X