வேறு இடத்திற்கு மாறுகிறதா ஏகே 61 ஷுட்டிங்...தரமான சம்பவம் காத்திருக்கு போலவே

சென்னை : அஜித்தின் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி வெளியாகும் அப்டேட்களால் படத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது.

டைரக்டர் ஹெச்.வினோத், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் மெகா வெற்றியை தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்றாவதாக ஒரு படம் இயக்கி வருகிறார். ஏகே 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

ரகசியமாக நடக்கும் ஏகே 61 ஷுட்டிங்

ரகசியமாக நடக்கும் ஏகே 61 ஷுட்டிங்

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏகே 61 படத்தின் ஷுட்டிங், ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கிட்டதட்ட 9 ஏக்கரில் மிக அதிகமான தொகையில் செட் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மவுண்ட் ரோடு வங்கி போன்று அமைக்கப்பட்டுள்ள செட்டில் இந்த ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஷுட்டிங் ஆரம்பிக்கப்பட்டது முதல் அஜித் மட்டுமே நடித்து வந்தார்.

ஒரு தகவல் கூட வரலியே

ஒரு தகவல் கூட வரலியே

பலத்த பாதுகாப்புடன் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருவதால் படம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. சமீபத்தில் இந்த படத்தில் வீரா, சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்திருப்பதாக கூறப்பட்டது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்றும், அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. அதே சமயம் இரண்டு ரோல்களில் நடிக்கிறார். வயதான காலேஜ் ப்ரோஃபசர் ரோலில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.

லேட்டஸ்ட் அப்டேட் இதுவா

லேட்டஸ்ட் அப்டேட் இதுவா

இதில் லேட்டஸ்ட் அப்டேட்டாக, தற்போது போடப்பட்டுள்ள சென்னை மவுண்ட் ரோடு செட்டில் அஜித்தும், சமுத்திரக்கனியும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். இது ஜுன் முதல் வாரம் வரை தொடர உள்ளதாம். அதற்கு பிறகு சிறிது பிரேக் விட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். அதற்கு பிறகு புதிய செட் அமைக்கப்பட்டு, மீதமுள்ள காட்சிகள் அதில் படமாக்கப்பட உள்ளதாம். இதுவரை மஞ்சு வாரியர் ஷுட்டிங்கில் பங்கேற்காததால், அடுத்த கட்ட ஷுட்டிங்கில் அவர் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.

தீபாவளி ரிலீசுக்கு ரெடி

தீபாவளி ரிலீசுக்கு ரெடி

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். ஏகே 61 படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளதாகவும், இதில் ஒன்று சென்டிமென்ட் பாடல் என்றும் கூறப்படுகிறது. விரைவில் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அதிக ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X