ஏகே61 படத்தின் கதை இதுவா...இன்று டைட்டில் வெளியாகுமா?

சென்னை : அஜித் அடுத்து நடிக்க போகும் ஏகே 61 படத்தின் கதை என்ன என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்படுமா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். இதனால் #Ajithkumar, #AK61 ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி உள்ளன.

அஜித் நடித்துள்ள வலிமை படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. வலிமை படம் ரிலீசான கையோடு அடுத்த படத்தின் வேலைகளில் தீவிரம் காட்ட துவங்கி விட்டனர் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர். இந்த கூட்டணி மீண்டும் இணையும் ஏகே 61 படத்திற்கான வேலைகள் தயாராகி விட்டது.

எடையை குறைக்கும் அஜித்

எடையை குறைக்கும் அஜித்

அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படத்தில் அவர் ஹீரோ-வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் வில்லன் ரோலுக்காக அஜித் நீண்ட வெள்ளை தாடியுடன் இருக்கும் நெகடிவ் இமேஜை போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார். வில்லன் ரோலுக்காக நீண்ட தாடி வளர்த்துள்ள அஜித், ஹீரோ ரோலுக்காக 25 கிலோ வரை எடையை குறைக்க திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே 10 கிலோ குறைத்து விட்டாராம்.

அஜித்திற்கு 2 ஹீரோயின்

அஜித்திற்கு 2 ஹீரோயின்

வலிமை படத்தில் டூயட் பாடல் இல்லாததை ரசிகர்கள் குறையாக கருதியதால் ஏகே 61 படத்தில் அஜித்திற்கு இரண்டு ஜோடிகளாம். தபு, அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் பிக்பாஸ் கவினும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐதராபாத்தை தொடர்ந்து புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் ஏகே 61 கதையா

இதுதான் ஏகே 61 கதையா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஏகே 61 படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டது தான் ஏகே 61 படத்தின் கதையாம். மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையில் அஜித் நடிக்க போகிறாராம். அதனால் மங்காத்தா படத்தின் நிறைய சாயல்கள் இந்த படத்திலும் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏகே 61 படத்தை 2022 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளாராம்.

Recommended Video

பாசிட்டிவ் டு நெகட்டிவ்.. வலிமை படத்தை பற்றிய டாப் 5 பீட்ஸ்.. பிகே வீடியோ இதோ!
இன்று டைட்டில் வெளியாகுமா

இன்று டைட்டில் வெளியாகுமா

ஏகே 61 படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் மாரச் 9 ம் தேதி துவங்க உள்ளதாகவும், இதற்காக ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்று பிரம்மாண்ட செட் தயாராக உள்ளதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது. பிரம்மாண்ட பூஜையுடன் இன்று துவங்கும் ஏகே 61 ஷுட்டிங்கை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டது. ஏகே 61 படத்திற்கு வல்லமை என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X