என்னது...அதுக்குள்ள ஏகே 62 அப்டேட்டா...டிரெண்டிங்கில் அட்டகாசம் செய்யும் அஜித்தியன்ஸ்

சென்னை : விஜய் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிக்க போகும் அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு அசர வைத்து வருகிறார்கள். அஜித்தின் ஏகே 62 படம் பற்றிய பல அப்டேட்களை ஒரே சமயத்தில் வெளியிட்டு, ட்விட்டர் டிரெண்டிங்கை திணறடித்து வருகின்றனர் அஜித் ரசிகர்களும் சினிமா வட்டாரத்தினரும்.

அஜித் நடித்த வலிமை படம் உலகம் முழுவதும் 250 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டத்தையே அஜித் ரசிகர்கள் இன்னும் கொண்டாடி முடிக்கவில்லை. அதற்குள் வலிமை பற்றி பல சர்ச்சைகள் கிளப்பப்பட்டு வருகின்றன. இவை முடிவுக்கு வருவதற்குள் ஏகே 61 படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

ரசிகர்களை மிரட்டும் அஜித் லுக்

ரசிகர்களை மிரட்டும் அஜித் லுக்

அஜித்தின் அடுத்த படமான ஏகே 61 படம் பற்றி பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில், ஏகே 61 படத்தில் அஜித் நெகடிவ் ரோல் செய்ய போகிறார் என்பதை மட்டும் தான் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்துள்ளார். நீண்ட வெள்ளை தாடியும் அஜித் இருக்கும் நெகடிவ் இமேஜை சமீபத்தில் வெளியிட்டார். அஜித்தின் தற்போதைய லுக் போட்டோக்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டி வருகிறது.

என்னது ஏகே 62 அப்டேட்டா

என்னது ஏகே 62 அப்டேட்டா

ஏகே 61 ஷுட்டிங் சமீபத்தில் துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதியாக தெரியாத நிலையில் படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. ஏகே 61 படம் தகவல்களே உறுதியாகாத நிலையில் ஏகே62 படம் பற்றிய தகவல்கள் வெளிவர துவங்கி விட்டன. இந்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி, டிரெண்டிங் ஆகி வருகின்றன.

ஷுட்டிங் தேதியே வந்தாச்சா

ஷுட்டிங் தேதியே வந்தாச்சா

விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீசாவதற்கு முன்பே தளபதி 66 படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதோடு தளபதி 67 படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இதற்கு போட்டியாக அஜித்தின் ஏகே62 படம் பற்றிய அப்டேட்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஏகே62 படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தான் தயாரிக்க உள்ளதாம். இந்த படத்தின் ஷுட்டிங் 2022ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் துவங்கப்பட உள்ளது.

ஏகே 62 ஹீரோயின் இவரா

ஏகே 62 ஹீரோயின் இவரா

இந்த தகவல் வெளியானதால் ட்விட்டரில் #AK62 என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி உள்ளது. இது மட்டுமல்ல #Nayanthara ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. ஏகே 62 படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாராம். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க போகிறாராம். அனிருத் தான் ஏகே 62 படத்திற்கு இசையமைக்க போகிறாராம். இந்த படம் பற்றிய அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளான மே 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாம்.

நயன்தாராவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா

நயன்தாராவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா

அதோடு சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் கோயிலுக்கு வந்த நயன்தாராவின் நெற்றியில் குங்குமம் இருக்கும் போட்டோ ஒன்று வெளியானது. இதனால் நயன்தாராவிற்கு திருமணம் ஆகி விட்டதாக தகவல் பரவியது. இந்த போட்டோ மற்றும் நயன்தாரா-விக்னேஷ் சிவனுக்கு திருமணம் முடிந்து விட்டதா என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது. இதனால் #Nayanthara ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X