அய்யோ.. அட்லியா? வேண்டவே வேண்டாம்.. ஏகே 63 தகவலால் பதறிப்போன அஜித் ரசிகர்கள்.. டிரெண்டாகும் மீம்ஸ்!
சென்னை: ராஜா ராணி மூலம் இயக்குநரான அட்லி நடிகர் விஜய்யுடன் மூன்று படங்கள் பணியாற்றிய நிலையில், அடுத்து ஷாருக்கான் உடன் ஜவான் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில், ஏகே 63 படத்தை அட்லி இயக்கப் போவதாக ஒரு தகவல் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.
நடிகர் விஜய்யின் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கிய இயக்குநர் அட்லியை அதிகம் ஓட்டியது அஜித் ரசிகர்கள் தான் என்கிற நிலையில், அய்யோ அவரா வேண்டவே வேண்டாம் என அஜித் ரசிகர்கள் #AK63 தெறிக்கவிட்டு வருகின்றனர்.
அட்லி - அஜித் காம்பினேஷனில் புதிய படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வரும் மீம்ஸ் குறித்து இங்கே பார்ப்போம்..

அஜித் ரசிகர்களே பிட்டு பேப்பர் தராங்க
எடுத்தா தீனா, அட்டகாசம் மற்றும் பில்லா கலந்து பாட்ஷா 2 எடுண்ணே என இயக்குநர் அட்லி எப்படியோ காப்பி தான் அடிக்கப் போகிறார். அதனால், அஜித்தின் சூப்பர் ஹிட் படங்களையே கலந்து ஒரு படம் எடுண்ணே என மீம் போட்டு அஜித் ரசிகர்களே இந்த அப்டேட்டை கலாய்த்து வருகின்றனர்.

வினோத்தே பண்ணட்டும்
சுட்லியும் இல்லை சீத்தாவும் இல்லை மறுபடியும் எங்க தலைவன் வினோத்தையே கூப்பிடுங்க.. பாக்ஸ் ஆபிஸ் மோசடி வைத்து ஒரு பக்கா படத்தை பண்ணிடுவார் என அஜித் ரசிகர்கள் ட்விட்டரை கலகலப்பு களமாக மாற்றி உள்ளனர்.

அட்லி டு தல ரசிகர்கள்
அட்லி To தல ரசிகர்கள்....
"தளபதி ரசிகர்கள் மீது வன்மம் இல்லைனு எழுது.. அவங்க எல்லோருமே உத்தமர்கள் என்று எழுதுதிக்கொடு படம் பண்றேன்.." என பெரிய டிமாண்டையே இயக்குநர் அட்லி வைப்பார் என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மங்காத்தாவ தூக்கிரு
எப்படியும் களவாடத்தான் போறன்னு தெரியும்.. பேசாம மங்காத்தாவையே தூக்கிரு, நல்ல குவாலிட்டியில பிரம்மாண்டமா அந்த படத்தை மறுபடியும் பார்த்தா மாஸாத்தான் இருக்கும் என பங்கம் பண்ணி வருகின்றனர்.

அட்டகாசம், தீனா
நீங்க தான் அஜித் படம் பண்றதுன்னு முடிவாகிடுச்சுன்னா அப்புறம் என்ன அட்டகாசம், தீனா இரண்டு படத்தையும் சேர்த்து எடு செம கலெக்ஷன் அள்ளும் என ஏகப்பட்ட மீம்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

கதறி அழும் அஜித் ரசிகர்கள்
ஏகே 62 படம் விக்னேஷ் சிவன் கூட, ஏகே 63 படம் அட்லி கூடவா.. அய்யோ இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட் என அஜித் ரசிகர்கள் மன்மதன் சிம்பு போல கதறி அழும் மீம்ஸும் டிரெண்டாகி வருகின்றன.

ச்சே.. இருக்காது
கண்டிப்பாக அஜித் மற்றும் அட்லி கூட்டணியில் ஏகே 63 படம் உருவாகாது. ரசிகர்களின் நிலைமையை கொஞ்சமாச்சும் புரிஞ்சி படம் பண்ணுவாரு அஜித் என நம்புறோம் என ச்சே.. இருக்காது டெம்பிளேட் மீமையும் போட்டு மரண கலாய் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

பழைய எதிரிகள்
இயக்குநர் அட்லி இப்போ தீ தளபதி பாடலில் வரும் "பழைய எதிரிகள் என் ரசிக படையிலே" என சும்மா கெத்தா பாடி வருவார் என அஜித் ரசிகர்களை சோஷியல் மீடியாவில் சும்மா வச்சு செய்து வருகின்றனர். விஷ்ணுவர்தன், வினோத்துன்னு கூட சொல்லுங்க, அட்லி மட்டும் வேணாம் தல என அஜித் ரசிகர்களும் ட்வீட்களை தெறிக்கவிடுகின்றனர்.


Click it and Unblock the Notifications











