»   »  என்னை கர்ப்பமாக வற்புறுத்தினார்: யுவராஜ் சிங்கின் தாய் மீது பெண் பரபர புகார்

என்னை கர்ப்பமாக வற்புறுத்தினார்: யுவராஜ் சிங்கின் தாய் மீது பெண் பரபர புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாய் தன்னை கர்ப்பமாக வற்புறுத்தியதாக பிக் பாஸ் 10 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் 10வது சீசன் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா கலந்து கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு திருமணமான நான்கே மாதங்களில் கணவரை பிரிந்துவிட்டார் ஆகான்ஷா.

தனது மாமியார் ஷப்னம் சிங் பற்றி ஆகான்ஷா நிகழ்ச்சியில் கூறியதாவது,

மாமியார்

மாமியார்

எனக்கும் ஜொராவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. யுவியாலும் பிரச்சனை இல்லை. என் மாமியார் தான் பெரும் பிரச்சனையாக இருந்தார்.

தேனிலவு

தேனிலவு

நானும், ஜொராவரும் தேனிலவுக்கு சென்றபோது கூட யுவராஜ் சிங்கின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்தது. எங்களை அவர்களின் கண் பார்வையிலேயே வைக்க வந்தார்கள்.

கர்ப்பம்

கர்ப்பம்

என்னை கர்ப்பமாகுமாறு என் மாமியார் ஷப்னம் வற்புறுத்தினார். என் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றார் ஆகான்ஷா.

பொய்

பொய்

ஆகான்ஷா கூறியது எல்லாம் பொய். அவர் எங்களின் பெயரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார். எங்கள் மீது பழி சுமத்தி தன் மீது அனைவரும் பரிதாபப்பட செய்கிறார் என்று ஷப்னம் தெரிவித்துள்ளார்.

English summary
Big Boss 10 contestant Akansha Sharma accused cricketer Yuvraj Singh's mother of forcing her to get pregnant.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil