»   »  சமுத்திரக்கனி பட தயாரிப்பாளரை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

சமுத்திரக்கனி பட தயாரிப்பாளரை அடித்து நொறுக்கிய ரவுடிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: சமுத்திரக்கனி இயக்கி வரும் ஆகாச மிட்டாயீ படத்தின் தயாரிப்பாளர் மஹா சுபைர் ரவுடிகளால் தாக்கப்பட்டுள்ளார்.

சமுத்திரக்கனி தான் இயக்கி, நடித்த அப்பா படத்தை மலையாளத்தில் ஜெயராமை வைத்து ரீமேக் செய்து வருகிறார். படத்திற்கு ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைத்துள்ளனர்.

Akasha Mitayee producer attacked, hospitalised

ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி படத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு படப்பிடிப்பு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது.

அப்போது குடிபோதையில் அங்கு வந்த 10 ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். மேலும் பொரடக்ஷன் கன்ட்ரோலர் பாதுஷா உள்ளிட்ட படக்குழுவினரும் தாக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் சுபைரின் தலை மற்றும் காதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Local henchmen have attacked Samuthirkani's Akasha Mitayee producer Maha Subair last night in Kochi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil