»   »  திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு

திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது என்று கூறப்படுகிறது.

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனிக்கும் அவரது காதலியான முன்னணி ஆடை வடிமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து திருமண தேதியும் குறிக்கப்பட்டது.

திருமணம்

திருமணம்

திருமணம் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடக்கவிருந்தது. அனைவருக்கும் அழைப்பிதழ் எல்லாம் கொடுத்தார்கள். இந்நிலையில் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம், இத்தாலி பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று நாகர்ஜுனா மற்றும் ஸ்ரேயா குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.

அகில்

அகில்

அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிவிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். இதையடுத்தே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

சமாதானம்

சமாதானம்

அகில் மற்றும் ஸ்ரேயா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ள அவர்களை சமாதானம் செய்து வைக்க நாகர்ஜுனாவும், ஜிவிகேவும் முயன்றும் ஒன்றும் முடியவில்லையாம்.

நாகர்ஜுனா

நாகர்ஜுனா

என் வீட்டிற்கு சமந்தா, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் வருகிறார்கள் என்று சந்தோஷமாக கூறி வந்தார் நாகர்ஜுனா. இந்நிலையில் திருமணம் நின்றுள்ளது. நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Nagarjuna's son Akhil and Shriya Bhupal's wedding has been reportedly called off after they ended their relationship.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil