»   »  சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி கேட்டால் நாகர்ஜுனா இப்படி சொல்லிட்டாரே!

சமந்தா, நாக சைதன்யா திருமணம் பற்றி கேட்டால் நாகர்ஜுனா இப்படி சொல்லிட்டாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சமந்தா, நாக சைதன்யாவின் திருமணம் குறித்து நடிகர் நாகர்ஜுனா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அகிலின் திருமணத்தை அறிவித்துள்ளார்.

சமந்தா தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த மகனும், நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு நாகர்ஜுனாவின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அவர்களுக்கு சமந்தாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை.

சமந்தா

சமந்தா

நாக சைதன்யா வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்கனவே சமந்தாவை பிடிக்கவில்லை. இந்நிலையில் அவர் வேறு நாக சைதன்யாவை சின்ன ஹீரோ என்று கூறி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றினார்.

திருமணம்

திருமணம்

நாக சைதன்யா மற்றும் அவரின் தம்பி அகில் ஆகியோரின் திருமணம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்போவதாக நாகர்ஜுனா கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

அகில்

அகில்

தெரிவித்தது போன்று நாகர்ஜுனா திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அது அகில் அவரது காதலி , ஸ்ரியா புபலின் திருமணம் பற்றிய அறிவிப்பு. அகிலுக்கும், ஸ்ரியாவுக்கும் வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது.

சைதன்யா

சைதன்யா

அகில், ஸ்ரியாவின் திருமணம் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அகிலின் திருமணம் சரி நாக சைதன்யாவின் திருமணம் என்று கேட்டதற்கு நல்ல நாள் பார்த்து அறிவிப்பதாக நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

English summary
Looks like actor Nagarjuna's son Akhil will get married before his elder brother Naga Chaitanya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil