twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வருங்கால இயக்குனர்களுக்கு அகிரா குரோசாவாவின் அட்வைஸ்..புத்தாண்டு ஸ்பெஷல்!

    |

    சென்னை: அகிரா குரோசாவா அவர்கள் மிக பிரபலமான ஜப்பானிய திரைப்பட இயக்குனர்.

    குரோசாவாவை தெறியாத உலக சினிமா ரசிகர்கள் யாரும் கிடையாது அவரின் சாதனைகள் அப்படி. உலக சினிமா வரலாற்றில் அவர் உருவாக்கிய திரைக்கதை பாணியும், சினிமாவை அவர் கையாண்ட விதமும் இப்போதும் சினிமாத் துறை சார்ந்த பலருக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.

    இயக்குனராக ஆக நினைப்பவர்களுக்கு குரோசாவா கூறும் அறிவுரைகளின் தொகுப்பு இதோ!

    பாடமாக உள்ளது

    பாடமாக உள்ளது

    சினிமா என்பது எளிய கதை சொல்லும் வடிவம் என்பதை உடைத்து பிரம்மாண்டங்களை காட்சிப்படுத்தினார். இன்று வெளியாகும் பல பிரம்மாண்ட திரைப்படங்களுக்கு அகிராவின் ‘செவன் சாமுராய்' தான் காட் பாதர். அகிரா குரோசாவா இயக்கிய செவன் சாமுராய், ரோஷோமான் போன்ற திரைப்படங்கள் இப்போதும் பல திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக உள்ளது.

    இளம் தலைமுறையினருக்கு

    இளம் தலைமுறையினருக்கு

    திரைப்படம் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று எனவும், திரைப்படம் எடுக்க நிறைய கற்றிருக்க வேண்டும் அனுபவம் வேண்டும் எனவும், உளமார திரைப்படம் எடுக்க முதலில் திரைக்கதை எழுத வேண்டும் அதற்கு பேப்பர், பென்சில் போதுமானது எனவும், எழுத எழுத தான் திரைப்படத்தின் வடிவத்தை கற்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

    ஒப்புக்கொள்கிறார் குரோசாவா

    ஒப்புக்கொள்கிறார் குரோசாவா

    திரைக்கதை எழுதுவது கடினமான ஒன்று தான் என ஒப்பு கொண்ட குரோசாவா, திரைக்கதை எழுத போதுமான பொறுமை தேவை அது மிக முக்கியமான ஒன்று எனவும் அந்த பொறுமை இன்று நிறைய பேரிடம் இல்லை எனவும், ஒரு முறை அந்த காரியத்தை பொறுமையுடன் செய்து முடித்தால் சிக்கல் இல்லாமல் நாம் அடுத்த கதைகளை எழுத முடியும் என கூறியுள்ளார்.

    திரைக்கதையின் தந்திரம்

    திரைக்கதையின் தந்திரம்

    இயக்குனராக விரும்பினால் எழுத்துப்பணி என்பது சுவாசிப்பது போல் இயல்பாகிவிட வேண்டும் எனவும், நாள் ஒன்றிற்கு அமைதியாக அமர்ந்து எழுதினால் 2,3 பக்கமாவது எழுதலாம் அதையே தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் நம் கையில் 100 பக்கங்கள் வந்துவிடும் எனவும் இந்த தந்திரம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

    ஊற்று வெளிவரும்

    ஊற்று வெளிவரும்

    இன்றைய இளைஞர்கள் பலர் புத்தகம் வாசிப்பதில்லை எனவும், புத்தகம் வாசித்தால் தான் அவர்களின் கற்பனை ஊற்று வெளிவரும் என அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்குள் எதுவும் இல்லாமல் உங்களால் எதையும் படைக்க இயலாது எனவும், பலதரப்பட்ட வாசிப்புகள் அவசியம் எனவும் குறிப்பாக கிளாசிக் நாவல்களின் வாசிப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

    Read more about: new year 2021 director
    English summary
    Akira Kurosawa's advice to filmmakers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X