»   »  கசிந்தன 2.ஓ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள்... அதிர்ச்சியில் ஷங்கர்!

கசிந்தன 2.ஓ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள்... அதிர்ச்சியில் ஷங்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் மிகப் பிரமாண்ட படமான 2.ஓ படத்தின் ஸ்டில்கள் திடீரென இணையத்தில் வெளியாகிவிட்டன. இது ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினரை அதிர வைத்துள்ளது.

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.ஓவின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது.


Akshai Kumar's first look in 2.O revealed

பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் வில்லனாக நடிக்கிறார். இப்படப்பிடிப்பு தளத்திற்குள் யாரும் செல்போன் உபயோகிக்கக்கூடாது, கேமரா பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதுவரை படத்தில் ரஜினியின் தோற்றம், ரோபோக்கள் தோற்றம், அக்ஷய் குமார் கெட்டப் என எதுவும் யாருக்கும் தெரியாமல் இருந்தது.


இந்நிலையில், தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் அக்ஷய் குமார், ரஜினி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் அக்ஷய்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.


அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை யாரோ இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். மிக வித்தியாசமான உயிருள்ள ரோபோ போன்ற தோற்றத்தில் அக்ஷய் காட்சி தருகிறார். எந்திரனில் புரொபஸர் போரா உருவாக்கும் கறுப்பு நிற ரோபோவின் உயிருள்ள வடிவமாக இதில் அக்ஷய்யைப் பார்க்க முடிந்தது.


இந்தப் படம் வெளியானது இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட குழுவினருக்கு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.

English summary
Some of the first look stills of Akshai Kumar in Rajini's 2.O have released online.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil