தலைவராக உனக்கு தகுதியில்லை...கமல் முன் சண்டை போட்ட அக்ஷரா – சிபி
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 42வது நாளை எட்டி உள்ளது. பாசம், சென்டிமென்ட், சண்டை, மோதல், காரசார விவாதங்கள் என அனைத்து கலந்த கலவையாக இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
Recommended Video
மொத்தம் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் 5 பேர் இதுவரை வெளியேறி உள்ளனர். நமிதா மாரிமுத்து, நாடியா சாங், அபிஷேக் ராஜா, சின்ன பொண்ணு, சுருதி ஆகியோர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியேறி உள்ளனர்.

வெளியேறும் மதுமிதா
ஆறாவது வாரத்தின் இறுதியில் வெளியேற போவது யார் என்பதை கமல் இன்று அறிவிக்க உள்ளார். இதில் மதுமிதா வெளியேறுவதற்கே அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் அவர் தான் மிக குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

கண்டித்த கமல்
அதற்கு முன் கடந்த வாரத்தில் நடந்த நீயும் பொம்மை நானும் பொம்மை லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கின் போது நடைபெற்ற சண்டை, மோதல்கள், தவறான வார்த்தை பிரயோகங்கள் பற்றி கமல் பேசி வருகிறார். இதில் கெட்ட வார்த்தை பேசியதற்காக சிபி போன்றோரை கமல் நேற்று கண்டித்தார்.

முதுகில் குத்தியவர் யார்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 42 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், உங்களுக்கு இந்த ஆறு வாரங்களில் முதுகில் குத்தியவர் யார் என்பதை அடையாளம் காட்டுங்கள் என கமல் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் நிரூப், நம்ம அபிநய் தான் என்கிறார். அபிநய், கண்டிப்பாக நிரூப்-ப சொல்வேன் என்கிறார்.

நிரூப் - அபிநய் சண்டை
தொடர்ந்து பேசும் நிரூப், சகுனி என்று ஒரு பட்டம் கொடுத்திருந்தோம். அதை இவருக்கு (அபிநய்) கொடுத்திருக்க வேண்டும் என்கிறார். அதற்கு பதிலளிக்கும் அபிநய், சகுனி என்று இங்கு யாரும் என்னை சொல்ல மாட்டார்கள் என்கிறார்.

அக்ஷரா- சிபி சண்டை
அடுத்த கட்டில் பேசும் அக்ஷரா, முதுகில் குத்துவது கண்டிப்பாக நான் சிபியை சொல்வேன். மனதில் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஃபிரண்ட் என சொல்லி, பேசி விட்டு போனவர் முதுகில் குத்தியதை போல் தோன்றியது என்கிறார். அதற்கு பதிலளிக்கும் சிபி, அவங்களுக்கு கேப்டன் ஆக எந்த தகுதியும் இல்லை என தோன்றியது என்கிறார்.

எக்ஸ்க்யூஸ் மி
அப்போது குறிக்கிடும் அக்ஷரா, நான் என்ன பேசி கொண்டிருக்கிறேன் நீ எதற்காக சம்பந்தம் இல்லாமல் இதை பேசுகிறாய் என கேட்கிறார். இதனால் சிபி - அக்ஷரா இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. கமல் முன்னிலையிலேயே இவர்கள் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இதை பார்த்து, எக்ஸ்க்யூஸ் மி என்கிறார் கமல். இந்த ப்ரோமோ செம வைரலாகி வருகிறது.

சிபி ரொம்ப பண்றார்
இந்த ப்ரோமோ பார்த்து விட்டு, ப்ரோமோல தலைவர் சவுண்ட் மட்டும் தான் இருக்கும். எபிசோட்ல ஒன்னும் இருக்காது. ராஜு தான் முதலில் சேவ் செய்யப்பட்டிருக்கிறார். பார்வையாளர்களும், போட்டியாளர்களும் ஒன்னு கிடையாது. ராஜு காப்பாற்றப்பட்டதாக கூறியதும் சிலரின் மூஞ்சியை பார்க்கனுமே. சிபி ரொம்ப தான் பண்றார். அவருக்கு தான் எல்லா தகுதியும் இருக்குன்னு நினைப்பு என பலர் கலாய்த்துள்ளனர்.

டிராமா க்வீ ன் அக்ஷரா
அக்ஷரா ஓவர் ஆட்டிட்யூட். சிபி கொஞ்சம் ஓவரா பண்ணுற போல இருக்கு. எக்ஸ்க்யூஸ்மி டிராமா க்வீ ன் அக்ஷரா கொஞ்சம் அமைதியாக இருங்கள். வேற லெவல்மா அக்ஷரா நீ என அனைத்தும் கலந்து நெட்டிசன்கள் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











