ஒன்றாக வெளியேறிய வருண், அக்ஷரா...கண்ணீருடன் வழியனுப்பிய போட்டியாளர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று முதல் முறையாக டபுள் எவிக்ஷன் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே, ஃபினாலேவிற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், 10 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த வாரம் 6 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், பிரியங்கா மட்டுமே நேற்று காப்பாற்றப்பட்டார். மீதமுள்ள ஐந்து பேரில் யார் வெளியேற போகிறார்கள் என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

அக்ஷரா வெளியேற்றம்
நிகழ்ச்சியின் 84 வது நாளான இன்று அக்ஷரா வெளியேறுவதை முதலில் அறிவித்தார் கமல். இதனால் தாமரை, ராஜு உள்ளிட்ட மற்ற போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். வருண், சிபி ஆகியோர் வருத்தத்துடன் அக்ஷராவை வழியனுப்ப தயாராகினர். நீ போய் விட்டால் என்ன செய்வேன் என தாமரை கதறி அழுதார்.

எவிக்ஷன் இல்லையா
வாசல் கதவு அருகே அனைவரும் அக்ஷராவை வழியனுப்ப செல்லும் போது, மீண்டும் கமல் வரும் மியூக் ஒலித்ததும் அனைவரும் ஓடி வந்தும் சோஃபாவில் வந்து அமர்ந்தனர். எவிக்ஷன் இல்லை என கமல் சொல்ல போகிறார் என போட்டியாளர்கள் எதிர்பார்த்தனர். அப்போது கமல், அதிகமானவர்கள் இருப்பதால் மற்றொருவரையும் வெளியேற்ற வேண்டிய இக்கட்டான சூழலில் நான் இருக்கிறேன் என கூறி மற்றொரு கார்டையும் எடுத்துக் காட்டுகிறார்.

வருணும் வெளியேற்றம்
சிபியை காப்பாற்றுவதாக கூறும் கமல், வருண் வெளியேற்றப்பட உள்ள கார்டை காட்டுகிறார். இதை கேட்டு மற்ற ஹவுஸ்மேட்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வருணும் செல்வதால் எதிர்பார்க்காத தாமரை வாய்விட்டு கதறி அழுதார்.

பிக்பாசில் முதல் முறை
பிக்பாஸ் வீட்டில் இருவராக சேர்ந்து வெளியேறுவதும், டபுள் எவிக்ஷன் என்பதும் இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி கமல் முந்தைய சீசன்களில் சொல்வதை போல், சேர்ந்து விளையாடினால், சேர்ந்தே தான் செல்ல வேண்டும் என்பதற்கு உதாரணமாக, அக்ஷரா மற்றும் வருணின் எவிக்ஷன் அமைந்துள்ளது.

அடுத்து யார்
இன்னும் இறுதிப் போட்டிக்கு 20 நாட்கள் மட்டுமே உள்ளது. அடுத்த யாரெல்லாம் வெளியேற போகிறார்கள், எப்படி எல்லாம் வெளியேற்ற பட போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











