Don't Miss!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- News
"பூப்போட்டாராமே".. ஓபிஎஸ்ஸூக்கு "வெள்ளைப்பூ" தந்த பேச்சியம்மாள்.. அதுவும் 3 முறை.. ஹேப்பியில் பன்னீர்
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Finance
அதானி குழுமத்தின் டாப் 5 நிறுவனங்களின் கடன் எவ்வளவு.. PSU வங்கிகள், தனியார் வங்கிகளில் எவ்வளவு?
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அந்த மனசு தான் சார் கடவுள்.. ஸ்பெஷல் சில்ட்ரனுடன் கொஞ்சி விளையாடும் பிக் பாஸ் அக்ஷரா, வருண்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் டபுள் எவிக்ஷனில் வெளியேறிய அக்ஷரா மற்றும் வருண் ஸ்பெஷல் சில்ட்ரனை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிட்ட வீடியோ ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளது.
Recommended Video
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போதும் தங்களின் நட்பை தொடர்ந்து வருகின்றனர் வருண் மற்றும் அக்ஷரா.
இருவரும் சரியான ஜோடி என்றும் இது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்யுங்கள் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அடேங்கப்பா..
மாளவிகா
மோகனன்
இத்தனை
கோடிக்கு
அதிபதியா?
வாய்பிளக்கும்
ரசிகர்கள்
!

சூப்பர் ஜோடி
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் அக்ஷரா மற்றும் வருண் இடையே லவ் டிராக் போட்டிருந்தால் கூட ரசிகர்கள் நன்றாகவே ரசித்துப் பார்த்து இருப்பார்கள். அந்தளவுக்கு இருவருக்குள்ளும் பிக் பாஸ் வீட்டுக்குள் நல்ல ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது. பாவனிக்கு அமீர் கொடுத்த முத்தம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அக்ஷராவும் தான் வருணுக்கு முத்தம் கொடுத்தார் என பாவனி ரசிகர்கள் பாயின்ட்டே இல்லாமல் புலம்ப ஆரம்பித்தனர்.

ஒன்றாக வெளியேற்றம்
பிக் பாஸ் வீட்டுக்குள் ஒன்றாக ஜோடியாக சுற்றிக் கொண்டிருந்த இருவரையும் ஒரேயடியாக ஒன்றாகவே வெளியேற்றி விட்டனர். பிக் பாஸ் வீட்டுக்குள் இன்னமும் அக்ஷரா மற்றும் வருண் உள்ளே இருந்திருக்கலாம் என அவர்களது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், வெளியே அதைவிட சூப்பராவே இருவரும் இருக்கின்றனர் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

ஹீரோ ஹீரோயின்
சினிமாவில் இருவரும் இணைந்து ஹீரோ ஹீரோயினாக நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், கூடிய விரைவிலேயே இருவரும் ஒன்றாக நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அக்ஷராவுக்கு சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

சிம்புவுடன் சந்திப்பு
மாமா ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங்கிற்கு நேரில் சென்ற நடிகர் வருண் சிம்புவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்குமா? என ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி வருகின்றனர்.

குருகுலம் சில்ட்ரனுடன்
சென்னையில் உள்ள குருகுலத்திற்கு சென்ற வருண் மற்றும் அக்ஷரா அங்குள்ள ஸ்பெஷல் சில்ட்ரனுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் அழுது கொண்டிருந்த அக்ஷரா குழந்தைகளுடன் சிரித்து மகிழ்வதை பார்த்த ரசிகர்கள் நீங்க இப்படியே இருங்க அக்ஷரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அந்த மனசு தான் சார் கடவுள்
வருண் மற்றும் அக்ஷரா இணைந்து எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்று ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். சீக்கிரமே இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கப் போவதால் இருவரும் அந்த கெமிஸ்ட்ரியை சிறப்பாக வளர்த்து வருகின்றனர் என்றும் இதே போல ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்து வாருங்கள் அந்த மனசு தான் சார் கடவுள் என அக்ஷராவின் இன்ஸ்டா போஸ்ட்டுக்கு கீழ் ஹார்ட்டீன்களை பறக்கவிட்டு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.