பிடிக்காதவங்கள எப்படி தான் டார்லிங்னு சொல்றீங்களோ.. சுத்த ஃபேக் நீங்க.. பாவனியை வெளுத்த அக்‌ஷரா!

சென்னை: பாவனி போலவே செம பதுசாக பேசி அவரை கண்ணாடி டாஸ்க்கில் வச்சு செய்தார் அக்‌ஷரா ரெட்டி.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகவே பாவனி, பிரியங்கா, அக்‌ஷரா எல்லாம் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலானது.

இரண்டு ரெட்டிகளுக்கும் இடையே யார் பெரிய போட்டியாளர் என்கிற ஈகோ நிறையவே இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இருவருக்கும் ஆர்மி

இருவருக்கும் ஆர்மி

இந்த சீசனில் அழகு பதுமைகளான பாவனிக்கும் அக்‌ஷராவுக்கும் இடையே தான் பலத்த போட்டி நிலவி வருகிறது. இருவருக்கும் தனித்தனியே மிகப்பெரிய ஃபேன் பேஸ் மற்றும் ஆர்மி எல்லாம் இருக்கு. இருவருமே கடைசி வரை இந்த சீசனில் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.

அழுகையிலும் போட்டி

அழுகையிலும் போட்டி

அழகில் மட்டுமின்றி யார் நல்லா அழுகிறார்கள் என்பதிலும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு எபிசோடில் இவர் ஒரு பக்கம் அழுதால் மற்றொரு பக்கம் இன்னொருவர் கேமரா பார்க்க அழுது கொண்டு இருப்பார்கள். இவர்கள் இருவரின் அழுகாச்சி ஃபூட்டேஜ்களை மட்டுமே தனி எபிசோடாக போடலாம்.

பாவனியின் கண்ணாடி

பாவனியின் கண்ணாடி

ராஜுவின் கண்ணாடியாக இருந்து பாவனி வச்சு செய்த நிலையில், பாவனியின் கண்ணாடியாக மாறிய அக்‌ஷரா பாவனி பற்றி ஏகப்பட்ட விஷயங்களை அவரை போலவே அமைதியாகவும் பொறுமையாகவும் ஆழமாகவும் சொல்லி அவர் மனதை புண்ணாக்கும் வேலைகளை சிறப்பாக செய்தார்.

உங்க திட்டம் தெரியுது

உங்க திட்டம் தெரியுது

யாருக்கும் எதுவுமே தெரியாத மாதிரி ஏகப்பட்ட திட்டங்களை போட்டு செம ஸ்மார்ட்டாக இந்த பிக் பாஸ் வீட்டில் விளையாடி வறீங்க.. ஆனால், உங்கள் திட்டம் மற்றவர்களுக்கு தெரியாமல் நினைச்சு நீங்க பண்ற விஷயம் எல்லாருக்கும் தெரிந்து விடுவது தான் உங்களுடைய மைனஸ் பாயின்ட்டே என்பது போல பேச தொடங்கினார் அக்‌ஷரா.

ஃபேக் பாவனி

ஃபேக் பாவனி

பிடிக்காதவர்களுடன் பேசாமல் இருப்பது தானே உண்மையா இருக்கிறது. ஒருத்தர் கூட சண்டை போடுறீங்க.. அப்புறம் அவர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்றீங்க.. ராஜு, நீருப், தாமரை அப்புறம் என்கிட்ட எல்லாம் சண்டை போட்டுவிட்டு அப்புறம் எதுவுமே நடக்காத மாதிரி வந்து ஏன் பேசுறீங்க என அக்‌ஷரா விளாசி தள்ளினார்.

டார்லிங்னு சொல்றீங்க

டார்லிங்னு சொல்றீங்க

பிடிக்காதவர்களை விட்டு பொதுவாக விலகி இருப்பது தான் அனைவரும் பண்றது. ஆனால், நீங்க பிடிக்காதவங்களையே டார்லிங்னுலாம் சொல்லும் போது எனக்கு செம காமெடியாக இருந்தது. என்னை எல்லாம் நீங்க டார்லிங்னு கூப்பிடும் போது பயங்கரமாக சிரிக்க தோணுச்சு என நல்லா நடிக்கிறீங்க பாவனி என்றும் உண்மையா இருங்க என்றும் அக்‌ஷரா வெளுத்து வாங்கி விட்டார்.

ஏற்றிவிடும் அபிநய்

ஏற்றிவிடும் அபிநய்

தனியாக வந்து பாவனி புலம்ப ஆரம்பித்த நிலையில், பூனைக்குட்டி போலவே பின் தொடர்ந்து வந்த அபிநயிடம் இந்த பஞ்சாயத்து பற்றி பாவனி பேசினார். டார்லிங் என்பது சாதாரணமாக நான் சொல்றது தானே என பாவனி கூற, ஆமாம் அக்‌ஷரா உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டாங்க என்பது போல ஏற்றிவிட அபிநய் நினைக்க அப்படியெல்லாம் இல்லை. நான் இன்னமும் நிறைய எதிர்பார்த்தேன் கம்மியா தான் பேசுனா அக்‌ஷரா என அபிநயை ஆஃப் செய்து விட்டார் பாவனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X