»   »  இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா

இதில் என்ன வெட்கம் வேண்டி இருக்கு: அஜீத் பட நடிகை அக்ஷரா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், அது குறித்து பொது இடத்தில் பேச வெட்கப்படவில்லை என்றும் நடிகை அக்ஷரா கவுடா தெரிவித்துள்ளார்.

அஜீத்தின் ஆரம்பம் படம் மூலம் பெயர் பெற்றவர் பெங்களூரை சேர்ந்த நடிகை அக்ஷரா கவுடா. அடுத்து அவர் ஜெயம் ரவியின் போகன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.


இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா கவுடா மன அழுத்தம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது,


மன அழுத்தம்

மன அழுத்தம்

சந்தோஷமாக, தன்னம்பிக்கையுடன் இருக்கும் அக்ஷராவை நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் இப்படி இல்லை. மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருந்தேன். மருத்துவரின் உதவியை நாடி அதில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டேன்.


வெட்கம்

வெட்கம்

மன அழுத்தம் பற்றி பொது இடத்தில் பேச நான் வெட்கப்படவில்லை. மன அழுத்தத்தோடு போராடுபவரா நீங்கள்? நீங்கள் தனி ஆள் இல்லை. பலர் மன அழுத்தத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


சோர்வு

சோர்வு

எப்பொழுது பார்த்தாலும் சோர்வாக உணர்வேன். சும்மா இல்லாமல் பிசியாகவே இருந்தாலும் அந்த உணர்வு உண்டு. நாள் முழுவதும் பிசியாக இருந்தாலும் இரவில் தூக்கம் வராது.


உதவி

உதவி

பிசியாக இருக்க அமெரிக்கா சென்று நடனம் கற்றேன். ஆனாலும் சோர்வு மாறவில்லை. அதன் பிறகே மனநல மருத்துவரை சந்தித்து உதவி பெற்று குணமடைந்தேன்.


அம்மா

அம்மா

நீ இப்படி யாரிடமாவது கூறினால் உன்னை பைத்தியம் என அழைப்பார்கள் என்று என் அம்மாவே கூறினார். இதனால் பலர் மன அழுத்தம் பற்றி வெளியே கூறுவது இல்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தீபிகா படுகோனேவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷ்யாம் பட்டிடம் சிகிச்சை எடுத்து குணமடைந்தேன் என்றார் அக்ஷரா.


English summary
Actress Akshara Gowda said that she doesn't feel shame to open up about depression. The Bogan actress fought with depression and is now feeling happy.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil