»   »  இரண்டே இரண்டு விஷயத்தால் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த அக்ஷரா ஹாஸன்

இரண்டே இரண்டு விஷயத்தால் பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த அக்ஷரா ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இரண்டே இரண்டு விஷயத்தால் பாலிவுட்காரர்கள் அக்ஷரா ஹாஸன் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் நடித்த முதல் இந்தி படமான ஷமிதாப் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அக்ஷரா, பிரபல நடிகர் நசீருத்தீன் ஷாவின் மகன் விவான் ஷா உள்ளிட்டோர் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது.

அக்ஷரா

அக்ஷரா

லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக உள்ளார் அக்ஷரா. ஓய்வில்லாமல் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் அக்ஷராவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல்

காய்ச்சல்

அக்ஷராவுக்கு காய்ச்சல் வந்தும் அவர் ஓய்வெடுக்காமல் பேட்டிகள் அளிப்பது, பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக இருந்துள்ளார். இதனால் அவரின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது.

மருத்துவர்

மருத்துவர்

எந்த நிகழ்ச்சிக்கும் செல்லக்கூடாது கண்டிப்பாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் வலியுறுத்திய பிறகே அக்ஷரா சில பேட்டிகளை ரத்து செய்துள்ளார்.

ஆட்டோ

ஆட்டோ

அக்ஷரா பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அவர் ஆட்டோவில் ஏறுவதை பத்திரிகையாளர்கள் பார்க்க சிரித்தபடியே கையசைத்துவிட்டு சென்றுள்ளார்.

கமல் மகள்

கமல் மகள்

பெரிய வீட்டு பெண்ணாக இருந்தாலும் ஆட்டோவில் செல்கிறார், காய்ச்சல் அடித்தாலும் வேலை தான் முக்கியம் என்று உள்ளார் என பாலிவுட்காரர்கள் அக்ஷராவை பற்றி பெருமையாக பேசுகிறார்கள்.

English summary
Akshara Haasan is too professional just like father Kamal Haasan. Bollywood has noticed it as she attended her upcoming movie promotions inspite of being down with fever.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil