»   »  கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்

கமல் மகளாச்சே, அதனால் தான் துணிந்து இப்படி செய்கிறார் அக்ஷரா ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
துணிச்சலான அக்ஷரா ஹாஸன். கமல் மகலாட்சே! - Akshara Hassan

சென்னை: கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் அடுத்த கட்ட நடிப்புக்கு தயாராகிவிட்டார்.

இயக்குனராக வேண்டும் என்ற ஆசையுடன் பாலிவுட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த அக்ஷரா ஹாஸன் நடிகையாகிவிட்டார். தனுஷின் ஷமிதாப் படம் மூலம் ஹீரோயின் ஆன அக்ஷரா அஜீத்தின் விவேகம் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

அப்பா கமல் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அக்ஷரா.

அக்ஷரா

அக்ஷரா

தூங்காவனம் புகழ் ராஜேஷ் எம். செல்வா விக்ரமை வைத்து இயக்கும் படத்தை கமல் தயாரிக்கிறார். அந்த படத்தில் அக்ஷரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அறிவிப்பு

அறிவிப்பு

ராஜேஷ் படத்தில் அக்ஷரா விக்ரம் ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம், அக்ஷரா ஜோடியாக நடித்தால் அப்பா, மகள் போன்று இருக்கும் என்பது ராஜேஷுக்கு தெரியாதா என்ன?

ஹீரோயின்

ஹீரோயின்

அக்ஷரா வெப் சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படங்களை அடுத்து வெப் சீரிஸ் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அக்ஷரா அதை தேர்வு செய்துள்ளார்.

ப்ரீத்

ப்ரீத்

மாற்றத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கும் கமல் ஹாஸனின் மகளாச்சே. அதனால் தான் வெப் சீரிஸில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கமல், மணிரத்னம் ஆகியோரின் மனம் கவர்ந்த மாதவனும் ப்ரீத் என்ற வெப்சீரிஸில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்வம்

ஆர்வம்

படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத நடிகர், நடிகைகள் தான் வெப் சீரிஸில் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது.

English summary
Akshara Haasan who has signed a movie with Chiyan Vikram is set to act as a leading lady in a web series. Akshara earlier wished to stay behind the cameras.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X