போர்டிங் ஸ்கூல் இவ்வளவு கஷ்டமா... ஆச்சரியமாக கேட்கும் அக்ஷரா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 எட்டாவது வாரத்தை எட்டி உள்ள நிலையில், இந்த வார லக்சுரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூலாக மாறி உள்ளது. இதில் இரண்டாவது வைல்ட்கார்டு என்ட்ரியாக வந்துள்ள அமீரும் பங்கேற்றுள்ளார்.
சிபி வீட்டின் வார்டனாகவும், ராஜு தமிழ் ஆசிரியராகவும், அபிஷேக் ராஜா, அமீர் ஆகியோர் ஆசிரியர்களாகவும், பிரியங்கா, நிரூப், தாமரை, அக்ஷரா, அபினய், வருண், இமான் அண்ணாச்சி, பாவ்னி, ஐக்கி பெர்ரி ஆகியோர் மாணவர்களாகவும் மாறி உள்ளனர். சிபி கண்டிப்பான வார்டனாக இரக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

போர்டிங் ஸ்கூல் போக விரும்பினேன்
இந்நிலையில் முதல் நாள் டாஸ்க் முடிந்ததும் நள்ளிரவு 1.35 மணிக்கு பாத்ரூம் ஏரியாவில் நடந்து கொண்டிருக்கும் அக்ஷரா, அங்குள்ள கேமிரா ஒன்றும் முன் நின்று, போர்டிங் ஸ்கூல் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை பார்த்ததில்லை. சிறு வயதில் அம்மா, அப்பாவிடம் போர்டிங் ஸ்கூலில் சேர்க்கச் சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் விடவில்லை.

ஹேண்ட்ஸ் ஆஃப் மாணவர்களே
போர்டிங் ஸ்கூல் எப்படி இருக்கும் என இங்கு வந்த பிறகு தான் பார்க்கிறேன். போர்டிங் ஸ்கூலில் வாழ்வது ரொம்ப கஷ்டம். ஒரு ரோபோவை போல் டைம் டேபிள் வைத்து வாழ்வது ரொம்ப கடினமானது. உண்மையிலேயே இது போல் ஹாஸ்டல் வாழ்க்கை வாழும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகப் பெரிய ஹேண்ட்ஸ் ஆஃப்.

ரொம்ப ரொம்ப கஷ்டம்
முதல் முறையாக போர்டிங் ஸ்கூல் எப்படி இருக்கும் என அனுபவிக்கிறேன். இந்த மாதிரி வாழ்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் என சொல்கிறார் அக்ஷரா. ஒரு நாள் போர்டிங் ஸ்கூலில் வாழ்வதை போல் டாஸ்கிற்காக செய்வதையே கடினம் என சொல்கிறாரா அக்ஷரா என ரசிகர்கள் பலர் கேட்டுள்ளனர்.

பிக்பாஸ் என்ன பேசினார்
முதல் நாளில் இப்படி பேசிய அக்ஷராவை, அடுத்த நாளே கடுப்பேற்றி, ஆத்திரப்பட வைத்து அழ வைத்து விட்டார் சிபி. அழுது, கத்திக் கொண்டிருக்கும் அக்ஷராவை கன்சஷன் ரூமிற்கு அழைக்கிறார் பிக்பாஸ். ஆனால் அங்கு என்ன சொன்னார் என இன்றைய எபிசோட்டில் காட்டவில்லை. அதே சமயம் சிறிது நேரத்திற்கு பிறகு கதறி கதறி அழுது கொண்டிருக்கிறார் அக்ஷரா.

எதுவும் கேட்காதீங்க
அனைவரும் டாஸ்க் செய்து கொண்டிருக்க அக்ஷரா மட்டும் யூனிஃபார்மில் இல்லாமல் வழக்கமான உடை அணிந்து கொண்டு, தனது படுக்கையில் தனியாக அமர்ந்து கொண்டிருக்கிறார். சாப்பிடவில்லை என கேட்கும் தாமரையிடமும், பிறகு சாப்பிடுகிறேன். இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என்கிறார் அக்ஷரா.


Click it and Unblock the Notifications











