»   »  'அக்ஷய்குமார் ஒரு சூப்பர் ஸ்டார்'...2.ஓ வில்லனைப் புகழும் இலியானா

'அக்ஷய்குமார் ஒரு சூப்பர் ஸ்டார்'...2.ஓ வில்லனைப் புகழும் இலியானா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: அக்ஷய் குமார் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என நடிகை இலியானா பாராட்டியிருக்கிறார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய்குமார் 2.ஓ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடிக்க, முக்கிய வேடத்தில் எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.இந்நிலையில் அக்ஷய்குமார் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் என நடிகை இலியானா பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் ''ருஸ்டம் படத்தில் முதன்முறையாக அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவருடன் நடித்தது ஒரு வியப்பான அனுபவமாக இருந்தது.

அவரின் நடிப்பை நம் குறைத்து மதிப்பிடுகிறோம் ஆனால் அவருக்குள் இருக்கும் திறமை அளப்பரியது. சொல்லப் போனால் அவர் ஒரு நடிப்பு சூப்பர் ஸ்டார்'' என்று பாராட்டியிருக்கிறார்.

டோலிவுட், கோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட்டின் பக்கம் இலியானாவின் கவனம் திரும்பியிருக்கிறது.இதனால் அங்கேயே முகாமிட்டு புதிய பட வாய்ப்புகளை தேடுவதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

English summary
Ileana D’Cruz feels that superstar Akshay Kumar is an underrated actor despite having a huge body of work. Ileana has teamed up with Akshay for the first time for the upcoming film Rustom and describes the experience of working with him as “amazing” and she is pretty excited.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil